பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

அவர், தம் குடும்பத்துடன் காங்தியடிகளைக் காண்பதற்காக வங்தார். டாக்டர் காயுடுவின் ஏழு வயதுச் சிறுமியும் வந்திருத்தாள். அப்பெண் கைகளில் கிறையத் தங்க வளையல்கள் அணிந்திருந்தாள்.

“இங்த வளையல்கள் உனக்கு எதற்கு ? எனக்குக் கொடுத்துவிடு’ என்றார், காங்தியடிகள் கூறியதைத் திரு வாளர் நாயுடு தமிழில் தம் குழந்தைக்குச் சொன்னர். குழங்தை உடனே வளையல்களைக் கழற்றிக் கொடுத்துவிட் டாள்.

“நான் விளையாட்டாகக் கேட்டேன் அம்மா! நீயே வைத்துக்கொள்!” என்று அடிகள் பலதடவை சொல்லியும் அக் குழங்தை கேட்கவில்லை. காந்தியடிகளிடமிருந்து வளே களேத் திரும்பப் பெற்றுக்கொள்ளக் கண்டிப்பாக மறுத்து விட்டாள்.


1947-ஆம் ஆண்டு, அக்டோபர் திங்கள் இரண்டாம் காள் வங்தது. அன்று காந்தியடிகளின் பிறந்தநாள். காங்தி யடிகள் சளியிலுைம், இருமலினலும், காய்ச்சலினுலும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இருமல் சிலசமயங்களில் மிகவும் கடுமையாக இருக்கும். அச் சமயங்களில் அருகி லிருப்பவர்களுக்கு அவர் படும் துன்பம் பரிதாபமாக இருக்’ கும். இவ்விருமல் காங்தியடிகளுக்குப் பிடித்தால் மூன்று வாரங்களுக்கு உயிரை வாங்கிவிடும். மருத்துவர்கள் ஒய் வெடுத்துக் கொள்ளுமாறு எவ்வளவோ எடுத்துக் கூறியும் காங்தியடிகள் கேட்கவில்லை. காலத் தொழுகை முடிந்த வுடன். உடனே அரிஜன் பத்திரிகைக்கு கட்டுரை எழுத வும், கடிதங்களுக்குப் பதில் எழுதவும் தொடங்கிவிட்டார். அன்று காங்தியடிகளைக் காண்பதற்காகப் பலரும் வந்துகொண்டே இருந்தனர். காட்கில், தேவதாஸ் காங்தி, அவர் குடும்பம், பட்நாகர், டாக்டர் ஜீவராஜ் மேதா, சர் ததார்சிங், ஆர்தர் மூர், சண்முகம் செட்டியார், பேராசிரியர்