பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

மஜீத், சர்தார் வல்லபாய் படேல், மணிபென், கணேச தத்தா, எச் எல். எ. ஆங் (பர்மிய தாதர்), டாக்டர் எம். அவுங்கு (சீனத்துரதர்), லேடி மவுண்ட் பேட்டன். ஹாமாயூன் கபீர் ஆகியோர் அவர்களில் குறிப்பிடத்தக்க வர்கள்.

அடிகளின் பிறந்தநாள், இந்திய மாதக் கணக் குப்படி வேறு நாள் வருகிறது. பாதருவா மாதம் 12ஆம் காள் அவருடைய பிறந்தநாள். அன்று தில்லியிலிருந்த குஜ ராத்தியர், காங்தியடிகளுக்கு அளிப்பதற்காக கிதி திரட்டி யிருந்தார்கள். காக்தியடிகளும் அக்த கிதியளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஒப்புதல் அளித்திருக்தார். இதை அறிந்த சர்தார்வல்லபாய் படேல், காங்தியடிகளேப் பார்த்து, “இவ்வாறு உடல்கலங் கெட்டு இருமிக்கொண்டிருக்கும் கிலையில், அவ்விழாவில் கலந்துகொள்ள என் ஒப்பினர்? நீர் மிகவும் பேராசைக்காரர். பணவாடை எத் திக்கிலிருங் தாவது உம் மூக்கில் உறைத்தால்போதும் மரணப் படுக்கை யிலிருந்து கூட எழுங்து உட்கார்ந்து விடுவீர். அக்தப் பணம் உங்கள் கைக்கு வந்து சேரத்தான் போகிறது. அப்படி யிருக்கும்போது, விடாமல் இருமிக்கொண்டு நீங்கள் ஏன் அங்கு செல்லவேண்டும்? ஆனல், கான் சொல்வதை நீங்கள் கேட்கமாட்டிர் என்பது எனக்குத் தெரியும்’ என்று கூறினர்.

அருகிலிருந்தவர்கள் எல்லாம் சர்தாரின் பேச்சைக் கேட்டு மெய்மறந்து சிரித்தார்கள். அடிகளும் சிரித்தார். அடிகளுக்கும் சர்தாருக்கும் ஒட்டுறவு அத்தகையது. அங்கு வந்திருந்தவர்கள், படேலைச் சிறிது நேரம் அடிகஆளப் பற்றிப் பேசவேண்டு மென்று கேட்டார்கள். படேல் மீண்டும் ஒரு நகைச்சுவை குண்டைத் தூக்கி எறிந்தார்.

‘இன்று என்ன, என்னுடைய பிறந்த காளா நான் பேசுவதற்கு உங்கள் பரிசுப் பொருள்களேயெல்லாம்