பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



உண்மையை உணரும் வரையில் கூட்டத்தைத் தொடங்க அடிகள் விரும்பவில்லை. வேறு வழியின்றி இராசன் கூட்ட கிர்வாகிகளே அழைக்கவேண்டியதாயிற்று. கூட்ட கிர்வாகியும் வந்து மேற்கூறிய பதிலேயே கூறினர். அடிகள் உள்ளம் அப்போதும் திருப்தியடையவில்லை.

“அந்தக் காண்டிரேக்டர் வந்திருக்கின்றாரா? அவர் வங்திருந்தால் அழையுங்கள்’ என்று கூறினர் காங்தியடி கள். பிறகு காண்டிரேக்டர் தாமே கேரில் வந்து, ஒத்துக் கொண்ட பிறகுதான் அடிகள் அக் கூட்டத்தைத் தொடங் கினர். உடனே இராசன் முதல் வேலையாகத் தமிழ்காட் டின் மற்ற இடங்களுக்கெல்லாம். ‘அரிஜன் கிதியிலிருந்து ஒருகாசுகூட வேறு எங்தச் செலவுக்கும் பயன்படுத்தக் கூடாது” என்று சுற்றறிக்கை விட்டார். இல்லாவிட்டால் இந்தக் கண்டிப்புக்காரப் பனியாவுக்கு யார் பதில் சொல்வது ?

 *

காந்தியடிகள் தேசபந்து கினைவு நிதிக்காக காட்டில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். ஒவ்வொரு காங் கிரஸ் தொண்டரும் வீடுவீடாகச் சென்று நிதி திரட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். ஒரு காங்கிரஸ் தொண்டர் தாம் திரட்டிய நிதியில் 7ே ரூபாய் உங்து வண் டிக்குச் செலவு செய்ததாக கணக்குக் காட்டியிருந்தார். இதைக் கண்ட காங்தியடிகள் மிகவும் சினங்கொண்டார். “உங்து வண்டிக்காக அவர் 67 ரூபாய் இந்த கிதியிலிருந்து செலவிட்டிருப்பதை கான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். இது போன்ற செயல்களே அநுமதித்தால் பொதுப்பணத் தின் துய்மையே கெட்டுவிடும். அவர் அப்பணத்தைத் தம் கைப் பொறுப்பிலிருக்தோ அல்லது வேறு வழியிலோ ஈடு கட்டியே ஆகவேண்டும்” என்று கண்டிப்பாகக் கூறினர்.

x#