பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

“ஆமாம்! அவன் தவற்றுக்காக வருந்துகிருன். ஆனல் உள்ளத்தால் வருந்துவது திருந்துவதாகாது. அவன் செய லால் தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும். தான் செய்த தவற்றுக்கு மாற்றுத் தேடவேண்டும். இவன் ஒரு காங்கிரஸ் தொண்டன். அதோடு படித்தவன். ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டனும் தன் நாணயத்தால் அக் கட்சிக்குப் புகழைத் தேடித்தரவேண்டும். இவன் உடனே திரும்பிச் சென்று கணக்குக் காட்டவேண்டிய ஒவ்வொரு காசையும் திருப்பிக் கொடுக்கவேண்டும். அதன் பிறகு வேண்டு மாளுல் என்னலான உதவியைச் செய்யலாம்’ என்று கூறினர் காங்தியடிகள்.

மீண்டும் ஒரு தொல்லை ஏற்பட்டது. ஊருக்குத் திரும்பிச் செல்ல அவ்விளைஞனிடம் காசு கிடையாது. புகை வண்டிக் கட்டணத்துக்கு ரூபாய் முப்பத்தைந்து வேண்டும். இதை உணர்ந்த ஆண்ட்ரூஸ் மிகவும் உள்ளம் இரங்கி, ‘பாபு இந்தப் பணத்தை வேண்டுமானல் காம் கொடுத்து விடுவோம். அவன் விரைவில் ஊர் திரும்பி ஆவன செய்

யட்டும்” என்று கூறினர். காங்தியடிகள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.

‘முடியாது! நாம் எங்கிருந்து இவனுக்கு முப்பத் தைந்து ரூபாய் கொடுக்க முடியும். கம் இரண்டு பேரிடத் திலும் காசு கிடையாது. மக்கள் கம்மை கம்பிக் கொடுத் திருக்கும் பொதுப் பணத்திலிருந்துதானே கொடுக்க வேண்டும்? அது என்னல் முடியாது. இவன் நடந்தே ஊர் திரும்பட்டும். முதலிலேயே காங்கிரஸ் செயற்குழுவிற்கு ஆயிரம் ரூபாய் கடன் பட்டிருக்கிருண்! அதோடு இந்தக் கடனும் சேர வேண்டுமா? அப்படிக் கொடுத்தாலும். நாம் கூறிய அறிவுரைகளின்படி இவன் காரியங்களைச் செய் வான் என்று எப்படி கம்ப முடியும் முதன் முதலில் பிறரைப் பணம் கேட்கும் பழக்கத்தையும், கடன் வாங்கும்