பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

கான்காம் சாமத்தில் அங் கண்பர் வழிக்கு வந்து ஆறு பவுன் தர ஒப்புக் கொண்டார். பிறகு விருத்தும் கடந்தது. இச் செய்தி காற்புறமும் பரவியபடியால் சந்தா வசூலும் எளிதாயிற்று.


சங்தா வசூலிப்பதில் அடிகள் எவ்வளவு பிடிவாதக்கார ராக இருந்தாரோ, அதேபோல அரசியலிலும் பிடிவாதக் காரராகவே இருந்தார்.

1922-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி காந்தியடிகள் பர்தோலியில் அஹிம்சையைக் கடைப் பிடித்துப் பொதுசனச் சட்டமறுப்பைத் துவங்குவதற்கு வேண்டிய ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு எதிர்பாராத சம்பவம் கிகழ்ந்து விட்டது. பிப்ரவரி 8-ஆங் தேதி, ஐக்கிய மாகிலத்தில், கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செளரிசெளரா’ என்ற சிறு நகரில், வெறிகொண்ட மக்கட் கூட்டமொன்று காவல் கிலேயம் ஒன்றைத் தாக்கி நெருப்பு வைத்து இருபத்தொரு காவல் வீரர்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்று விட்டது. இச் செய்தியை உணர்ந்த காங்தியடிகள் அடக்க முடியாத கவலைக்குள் ளானர். மக்களின் வெறிச் செயலை எண்ணிக் கண்ணிர் வடித்தார். இன்னும் இந்திய காட்டு மக்களுக்கு அஹிம்சையின் தத்துவம் புரியவில்லை என்று கூறிச் சட்ட மறுப்பை கிறுத்தி விட்டார். இந்தியத் தலைவர் களுக்கும். தொண்டர்களுக்கும் இது பெரிய ஏமாற்றமாகி விட்டது. எவ்வளவோ கேட்டுக் கொண்டும் காங்தியடிகள் சட்ட மறுப்பைத் தொடங்கவில்லை.

1931-ஆம் ஆண்டு இந்தியகாட்டு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாகும். அங்த ஆண்டில்தான் இந்திய மக்கள் இமயம் முதல் குமரிவரை வீறு கொண்டு விழித்தெழுந்தார்கள். அவ்வாண்டு வேல்ஸ் இளவரசர்