பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

ஜாலியன் வாலாபாக்கை நான் வாங்காமல் விடமாட்டேன். என் ஆசிரமத்தை விற்று வாங்கப் போகிறேன்” என்று சொன்னர். உடனே வேறு எதுவும் பேசாமல் அவ் வணிகர் கள் பணம் சேர்த்துக் கொடுக்க இசைக்தனர்.

19. பொறுப்புணர்ச்சி

காந்தியடிகள் எவ்வளவு சிறிய வேலையாக இருங் தாலும் பொறுப்புணர்ச்சியோடு கடந்துகொள்ள வேண்டும் என்பதில் அளவற்ற விருப்பம் உடையவர். அரசியற் பணியாக இருந்தாலும் சரி; அல்லது ஆசிரமப் பணியாக இருந்தாலும் சரி; அருகிலிருந்து பொறுப்போடு கற்றுக் கொடுப்பார். தமக்கிருக்கும் இடையருத அலுவல்களின் இடையிலும், காலேயில் சமையலறைக்கு வந்து ஆசிரமவாசி களோடு சேர்ந்து தாமே காய்கறிகளை நறுக்குவார். எவ் வாறு சமையல் செய்யவேண்டுமென்பதையும் கற்றுக் கொடுப்பார். மற்றவர்களும் பொறுப்போடு கடந்து கொள் வதற்காகத் தாமே அப்பணிகளைப் பொறுப்புடன் செய்து காட்டுவார். அவரிடத்தில் அலட்சிய புத்தியை எப்போதும் காண முடியாது. சில சமயங்கள் ஏதேனும் ஒருசிறு பொருளே இழக்க கேர்ந்தால், அதைப்பற்றி நாம் கவலைப்படமாட் டோம். போளுல் போகிறது என்று பொறுப்பற்று இருந்து விடுவோம். ஆனல் காங்தியடிகள் ஒரு சிறு பொருளாக இருங்தாலும், அதைப் பொறுப்பின்றி இழக்கமாட்டார்.

ஒருநாள் காங்தியடிகள் வைத்திருந்த சிறிய பென்சில் ஒன்று தொலைந்து விட்டது. அதைக் கண்டுபிடிப்பதற்காக அவர் அரும்பாடு பட்டார். புத்தங்களைப் புரட்டிப் பார்த் தார். மேசை காற்காலிகளைப் புரட்டித் தேடினர். பெட்டி களைக் குடைந்து தேடினர். இரண்டு அங்குல நீளமுள்ள அந்த எழுதுகோல் எங்கோ மறைந்து கொண்டு அவரோடு கண்ணும்பூச்சி விளையாடியது. அவரும் அரைமணி நேர