பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

267

“ஏன்?” என்றார் அடிகள். அதற்கு எவ்வாறு விடை யிறுப்பதென்று மனுவுக்குப் புரியவில்லை. நவகாளியில் தென்னைமரங்களும், பாக்குமரங்களும் காடுபோல் வளர்ந் திருந்தன. புதிதாகச் செல்லும் ஒருவர் அக்காட்டின் நடுவே எளிதில் வழி தவறக்கூடும். அதுவுமல்லாமல் வகுப் புக்கலவரம் அப்போது மிகுந்திருந்த நேரம், மனுதி செல் லும் பாதை தனிமையானது. அப்பாதையின் வழியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக அமைந்திருந்த சில வீடு களிலும் இஸ்லாமியர்களே குடியிருந்தார்கள். அஞ்சத் தக்க அத் தனிவழியில், மனு தனியே செல்ல வேண்டி யிருந்தது. பாவம்’ அவள்தான் அடிகளின் கணக்குப்படி பெருந்தவறு செய்துவிட்டாளே!

போகும் வழியில் யாராவது ஒரு வகுப்பு வெறி கொண்ட முரடன் தன்னை வழிமறித்தால் யாதுசெய்வது?” என்று ஒரு முறை எண்ணிப் பார்த்தாள். அவள் உள்ளம் அச்சத்தால் அதிர்ந்தது. அவள் நா ராமநாமத்தை ஜெபிக் கத் தொடங்கியது. அவள் கால்கள் ஒற்றையடிப்பாதை யில் விரைந்து சென்றுகொண்டிருந்தன. மிகுந்த தொல்லப் பட்டு அந்தச் சிற்றுாரை அடைந்தாள். முதல்காள் தங்கி யிருந்த அந்த வீட்டில், ஒரு கிழவி இருந்தாள். அவளுக்கு எப்படித் தெரியும் அக்கல் உயர்ந்தது என்று அதை வெளியில் எடுத்து எறிந்துவிட்டாள். நீண்டநேரம் தேடிக் கடைசியாக அக்கல்லைக் கண்டுபிடித்தாள் மனு. அவளுக்குப் போன உயிர் திரும்பிவந்தது.

உடனே நாராயணபுரியை கோக்கிப் புறப்பட்டாள். பிற்பகல் ஒரு மணிக்கு நாராயணபுரியை அடைந்தாள். காஆலயில் 9.30 மணிக்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டவள்; ஆகையால் பசிவேறு வயிற்றைக் கிள்ளியது. பசிக்காகக்கூட அவள் வருந்தவில்லை. காங்தியடிகளுக்கு அன்று சேவை செய்ய முடியாமல் போய்விட்டதே என்பதற்காகப் பெரிதும் வருந்தினள். -