பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

268

அக்கல்லேக் காங்தியடிகளின் மடிமீது வைத்துவிட்டு மனு தேம்பித்தேம்பி அழத் தொடங்கிள்ை. உடனே காங்தியடிகள், ‘மனு! இன்று t சோதனைக்கு உட்படுத்தப் பட்டாய், கடவுள் என்ன செய்தாலும் கமக்கு நன்மையே செய்கிறார், நீ என்ைேடு புறப்படட முதல்நாள், என் னுடைய தொண்டில் பங்கு கொள்வது மிகவும் கடினம் என்றும் குலையாத மன உறுதி மிக்கவருக்கே அது சாலும் என்றும் நீண்ட நேரம் சொன்னேன். சிறு தவறுசெய்து விட்டால்கூடச் சோதனையில் நீ தோல்வி யடைந்ததாகவே பொருள். நீ விரும்பினல் மகுவாவுக்கு உன் தங்தையிடம் திரும்பிச் சென்றுவிடலாம். ஆல்ை பிரயாணத்தின் குறுக்கே உன்னைத் திரும்பிச் செல்ல அனுமதிக்கமாட்டேன். உனக்கு, முதல் சோதனையை இவ்வளவு விரைவில் அளித்த இக்கல்லுக்கு நன்றி செலுத்துகிறேன். அச்சோதனையில் வெற்றிபெற்றாய். கான் இப்போது எங்த அளவு மகிழ்ச்சி யடைந்திருக்கிறேன் என்பதை நீ உணரமாட்டாய். இந்தக் கல் இருபத்தைக்து ஆண்டுகளாக என் நலனைக் காப்பாற் றும் நண்பனுக விளங்குகிறது. கான் சிறையிலிருந்தாலும் சரி, மாளிகையிலிருந்தாலும் சரி, இதுவே என் நீங்காத் துணை. இந்தக் கல் தொலேங்துவிட்டால் என்னுள்ளமும், மீரா பென் உள்ளமும் ஒருங்கே வருங்தும். அதுவுமன்றி, பயனுள்ள பொருள்களின் மீது கண்ணுங் கருத்தோடு இருக்க வேண்டுமென்பதற்கு இன்று நீ அரிய பாட மொன்று கற்றாய். இது ஒரு சிறு கல்தானே; இது தொ8லங் தால் என்ன? இதைப்போன்று எத்தனையோ கற்கள் கிடைக்கும்; ஏதாவதொன்றை அந்தக் கல் இருந்த இடத் தில் வைத்துவிடலாம் என்று எண்ணுவது பெருந்தவறு.” என்று கூறி முடித்தார்.

மனு, காங்தியடிகளே கோக்கி, ‘பாபு ராமநாமத்தை முழுமனதோடு என்றாவது ஜெபித்தேன் என்றால் அது இன்று தான். அப்பயங்கரமான வழியில் சென்றபோது என் உள்ளம் மிகவும் கடுங்கியது’ என்று சொன்னுள்,