பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

269

உடனே காந்தியடிகள் சிரித்துக்கொண்டே, ‘உண்மை! உண்மை துன்பம் வந்த காலத்தில்தான் ஒவ்வொருவரும் ஆண்டவனே கினைக்கிறார்கள்” என்று கூறினர்.

20. நகைச்சுவை

பொறுப்பான அலுவல்களில் ஈடுபட்டிருப்பவர்களும், சமய உணர்வு கொண்டவர்களும், பொதுவாக நகைச் சுவையை விரும்புவதில்லை என்று எல்லோரும் எண்ணு கிறார்கள். காந்தியடிகள் சமயம் நேரும்போதெல்லாம் ககைச்சுவைத் துணுக்குகளை அள்ளி வீசிச் சிரித்து மகிழத் தவறுவதில்லை என்பதைப் பலர் கேட்கும்போது, கம்புவ தில்லை. ‘இவ்வளவு பெரிய அரசியற் பொறுப்புகளேத் தாங்கிக்கொண்டு ஒய்வில்லாமல் உழைக்கும் காங்தியடி களுக்குச் சிரிக்கவும் நகைச்சுவையாகப் பேசவும் கேரமேது’ என்று பலர் கேட்பதுண்டு. இவ்வாறு சமயம் நேரும்போ தெல்லாம். எல்லாச் சூழ்நிலையிலும் சிரிக்கக் கற்றுக் கொண்ட காரணத்தாலேயே, இவ்வளவு பெரிய அரசியம் பொறுப்புக்களைத் தம் தோளில் சுமந்து கவலையின்றி அவைகளைச் செய்ய முடிகிறது’ என்று அவர்களுக்குக் கூறுவார் காங்தியடிகள்.

அவர் ஒரு நாள் ஒரு கண்பரிடம் “நான் நகைச்சுவை யில் விருப்பம் கொண்டிராவிட்டால், என்வாழ்வில் எதிர்ப் பட்ட துன்பங்கள் என்னே நீண்ட நாட்களுக்கு முன் பாகவே அழித்தொழித்திருக்கும். நான் கடவுளின்பால் தளராத கம்பிக்கை வைத்திருக்கிறேன். கடவுள் எனக்கு வழி காட்டுகிறார். ஆகையில்ை என்னைப்பற்றிப் பிறர் என்ன சொல்லுகிறார்கள் என்று நான் எப்பொழுதும் கவலைப்படுவதில்லை, பிறர் என்னேப் பார்த்து இகழ்ந்து பேசிச் சிரிக்கும்போது, நான் அவர்களைப் பார்த்துச் சிரித்து என் துன்பத்தைப் போக்கிக் கொள்கிறேன். அதனல்