பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273

“அப்படிச் சொல்லாதீர்! எனக்குத் தெரியும் சில பிராமணர்கள் பெரிய பெரிய லட்டு உருண்டைகளை டசன் கணக்கில் பஜ்ஜியின் துணையில்லாமலே விழுங்கித் தள்ளு கிரு.ர்கள்!” என் ருர் காந்தியடிகள்.

மருத்துவர் சிறிது பதட்டமடைந்தார். ஹோமியோ பதி மருத்துவம், நோயின் அறிகுறியைப் பூரணமாக உணர்ந்த பிறகே மருந்து கொடுக்க வேண்டும் என்ற கிலேயில் அமைந்தது என்பர். ஆகையில்ை மருத்துவரும் காந்தியடிகளுடைய கோயின் காரணத்தை, அவர் மூல மாகவே அறிவதற்கு எவ்வளவோ பாடுபட்டுப் பார்த்தார். காங்தியடிகள் அசைந்து கொடுப்பதாகக் காணுேம். இருங் தாலும் மருத்துவர் விட்டவரல்லர்.

“உங்களுடைய கினைவாற்றல் எத்தகையது?” என்றார் மருத்துவர்.

“நீங்கள் கினேப்பதுபோல் மோசமானதுதான்! கான் அடிக்கடி மறதியின்பால் படுகிறேன். சில நண்பர்கள் முழுப் பாடலே ஒரு தடவை படித்ததும், மனப்பாடமாகச் சொல்லுகிறார்கள். அவர்களைக் கண்டால் எனக்குப் பொருமையாக இருக்கிறது, நீங்கள் அத்தகைய கினே வாற்றலே எனக்குக் கொடுக்க முடியுமா ? அவ்வாறு கொடுத்தால், சம்பளமில்லாத ஏஜெண்டாக உங்களுக்குப் பணிபுரிவேன்!” என்றார் காங்தியடிகள்.

“ஆண்டவன் ஒருவனல்தான் அத்தகைய திறமையை உங்களுக்குக் கொடுக்க முடியும். நீங்கள் எவ்வளவுதான் எனக்குப் பொருள் கொடுத்தாலும், என்னல் அத் திறமையை உங்களுக்கு அளிக்க முடியாது” என்றார் மருத்துவர்.

“அப்படியென்றால் சும்மாவே கொடுங்கள்” என்று அடிகள் சிரித்துக்கொண்டெ சொன்னர்.