பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

277

“ஆமாம்! நான் மகாத்மாவல்லவா! மகாத்மாக்கள் எப்போதும் சாதாரண மக்களிடமிருந்து மாறுபட்டவர்கள். நீங்களெல்லாம் சேர்ந்துதானே என்னே மகாத்மாவின் கிலேக்கு உயர்த்தினர்கள்? ஆனல் அந்த மகாத்மா போவி யாக இருந்தாலும் கவலையில்லை. ஒரு தடவை மகாத்மா” பட்டம் பெற்று விட்டால் போதும். அம் மனிதன் சாதாரணப் பழக்க வழக்கங்கட்கும் கடைமுறைகளுக்கும் அப்பாற்பட்டவன்; உயர்ந்தவன் 1 கினேவில் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிச் சிரித்தார்.

21. மூன்றாம் வகுப்புப் பயணம்

பி ற்காலத்தில் மூன்றாம் வகுப்பிலேயே பயணம் செய் வேன் என்று பிடிவாதமாக இருந்த காங்தியடிகள் இளமை யில் முதல் வகுப்பிலேயே பிரயாணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தார். தம்மைப்போன்ற ஒரு பாரிஸ்டர்’ முதல் வகுப்பில் பயணம் செய்வதுதான் மதிப்பு என்று கருதினர். காங்தியடிகள் தாதா அப்துல்லா கம்பெனி யாரின் வழக்கு சம்பங்தமாகத் தென் ஆப்பிரிக்காவுக்கு முதன் முதலில் சென்றார் என்பதை நாம் அறிவோம். அவர் புறப்பட இருந்த கப்பலில் முதல் வகுப்பு டிக்கெட் கிடைக்க வில்லை என்று தாதா அப்துல்லா கம்பெனி கிர்வாகி கூறி விட்டார். கப்பலின் மேல் தளத்தில் (Deck) பிரயாணத் துக்கு ஏற்பாடு செய்யலாம் என்று குறிப்பிட்டார். பாரிஸ் டர் ஆகிய தாம் முதல் வகுப்புக்குக் கீழே பிரயாணம் செய் வதா? என்று எண்ணினர். கிர்வாகியின் பேச்சில் அவருக்கு கம்பிக்கை ஏற்படவில்லை.

“நானே போய் விசாரித்துப் பார்க்கிறேன்” என்று சொல்லிக் கப்பல் தலைவரிடம் நேரில் சென்றார். “எப்படி யாவது நெருக்கிப் பிடித்து எனக்கு ஒர் இடம் கொடுக்கக்