பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 9

துப்பட்டி, ஒரு மண் கூஜா ஆகியவைதான் காங்தியடிகள் மூன்றாம் வகுப்புப் பயணத்துக்காக எடுத்துக் கொண் டவை. கோகலே, பிரயாணத்துக்காகப் பூரிகளும், லட்டு களும் தயாரித்து ஒரு சிற்றுண்டிப் பாத்திரத்தில் வைத்துக் கொடுத்தார்.

* ::

காங்தியடிகள் எதிர்பார்த்தது போலவே மூன்றாம் வகுப்புப் பயணம் மிகவும் மோசமாயிருந்தது. அதிகாரிகள் மூன்றாம் வகுப்புப் பி ய ர னி க ளே ஆடுமாடுகள் என்று எண்ணி கடத்தினர்கள். இங்கிலாந்திலும் தென்னுப்பிரிக்காவிலும் காந்தியடிகள் புகைவண்டிப் பயணம் செய்ததுண்டு. அங்கேயெல்லாம் மூன்றாம் வகுப்பு இவ்வளவு மோசமாக இல்லை. முதல் வகுப்புக்கும் மூன்றாம் வகுப்புக்கும் இவ்வளவு வேறுபாடும் கிடையாது. தென்னப் பிரிக்காவில் பெரும்பாலும் மூன்றாம் வகுப்பில் நீகிரோவர் தாம் பிரயாணம் செய்வார்கள். ஆயினும் அங்கே மூன்றாம் வகுப்பில் இதைவிட அதிக வசதி அளிக்கப்பட்டது. சில வண்டிகளில் மூன்றாம் வகுப்பில்கூட இரவில் துரங்க இட மும் மெத்தை தைத்த இருக்கையும் ஏற்படுத்தியிருந்தார் கள். கூட்டம் அளவுக்கு அதிகம் ஆகாமலும் பார்த்துக் கொண்டார்கள். இங்கேயோ நிலைமை எல்லா விதத்திலும் மோசமாயிருந்தது. வசதிகளும் இல்லே; கூட்டமும் குறிப் பிட்ட எண்ணிகையைவிட எப்போதும் அதிகம்.

இரயில்வே அதிகாரிகளின் அசட்டையும் அக்கிரமங் களும் ஒருபுறம் இருக்க, பிரயாணிகளும் பெரும் அகியாயங் கள் செய்தார்கள். மற்றப் பிரயாணிகளின் வசதியைப் பொருட்படுத்தாமல் கு ப் ைப க ளே ப் போட்டார்கள்; சுருட்டுக் குடித்தார்கள்; வெற்றில் புகையிலை மென்று. துப்பி வண்டியை எச்சில் குழியாக்கினர்கள். கூச்சல் போடுவதும், ஆபாச மொழிகள் பேசுவதும் அதிகம். இந்த