பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

மோசமான சூழ்நிலையை எவ்வாறு சீர்திருத்துவது என்று காந்தியடிகள் சிங்தனை செய்தார். படித்த வகுப்பார் மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்வதுதான் அதற்கு வழி என்று தோன்றியது. படித்தவர்கள் மூண்ரும் வகுப்பில் பிரயாணம் செய்து, மற்றவர்களின் அநாகரிக வழக்கங்களைச் சீர்திருத்த வேண்டும். அவசியம் ஏற்பட்ட போதெல்லாம் வசதிக் குறைவுகளேப்பற்றி மேல் அதிகாரி களுக்குப் புகார் எழுத வேண்டும். இரயில்வே ஊழியர் களுக்குக் கையூட்டு வழங்கித் தங்கள் சொந்த வசதிகளேத் தேடிக்கொள்ளக் கூடாது. விதிகளே யார் மீறி கடந்தாலும் அதைக் கண்டிக்க வேண்டும்; தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படி யெல்லாம் செய்தால் ஒருவாறு சீர் திருத்தலாம் என்று எண்ணினர். தாமே இப்படி யெல் லாம் செய்ய வேண்டுமென்றும், அதற்காக ஒரு இயக்கமே கடத்த வேண்டுமென்றும் எண்ணினர். பிறகு பெரிய பெரிய அ ர சி ய ல் கிளர்ச்சிகளில் ஈடுபட்டதால் இவ் வெண்ணம் கைவிடப்பட்டது. இவ் வநுபவம் 60 ஆண்டு களுக்கு முன் ஏற்பட்டது. நாடு சுதந்தரம் பெற்ற பிறகும் கூட, மூன்றாம் வகுப்புப் பயணம் நரகவேதனையாகவே இருக்கிறது.

மூன்றாம் வகுப்புப் பிரயாண அநுபவத்தைப் பற்றிக் காந்தியடிகள் மற்றாெரு இடத்தில் குறிப்பிட்டிருப்ப தாவது :

“பெரிய மனிதர்கள் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்யப் பிரியப்பட்டால், ஏழைகள் உள்ளாகவேண்டி யிருக்கும் எல்லா விதிகளுக்கும் அவர்களும் உள்ளாக வேண்டியது அவசியம். இரயில்வே ஊழியர்களும் வேறு பாடு கருதாமல் கடந்துகொள்ள வேண்டும். அவர்கள் மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளே மனிதர்களாகவே பாவிப் பதில்லை என்பதும் கேவலம் ஆடுமாடுகளாகப் பாவிக் கிறார்கள் என்பதும் என் அதுபவம். படித்த பணக்கார