பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282

‘உம்முடைய கடமை எதுவென்று உமக்குத் தெரியும். பிரயாணிகளைக் க டி ங் து கொள்ளாதீர்! கையூட்டுப் பெரு தீர்! இவ்விரண்டு கொள்கைகளைச் சரிவர வாழ்க்கை யில் கடைப்பிடியுங்கள். அதுவே நீங்கள் எனக்குச் செய்யும் உதவி’ என்றார் அடிகள்.

 $:

நவகாளியிலும், பீகாரிலும் கடைபெற்ற வகுப்புக் கலவரத்தைச் சீர்படுத்துவதற்காகக் காந்தியடிகள் 1944ஆம் ஆண்டு சென்றாரல்லவா? அவ்வாண்டு மார்ச் திங்கள் 30-ஆம் நாள் மவுண்ட்பேட்டன் பிரபுவைக் காணவேண்டி யேற்பட்டது. மவுண்ட்பேட்டன் பிரபு காங்தியடிகளுக்கு ஒரு விமானத்தை அனுப்பி வைத்தார். ஆனல் காங்தியடி கள் அதில் எறமறுத்து விட்டுப் புகைவண்டியிலேயே தில்லி புறப்பட்டார்.

காங்தியடிகள் மனுகாங்தியை கோக்கி, “குறைந்த சாமான்களே எடுத்துக்கொள். ஒரு சிறிய மூன்றாம் வகுப்புப் பெட்டியில் நாம் ஏறிக்கொள்ள வேண்டும்,’ என்று சொன்னர்.

மனு, காங்தியடிகள் கூறியபடியே குறைந்த சாமான் களோடு புறப்பட்டாள். ஆல்ை இரட்டைப் பெட்டி (Double compartment)யில் ஏறிக்கொண்டாள். யாராவது காங்தியடிகளைப் பார்க்க வங்து கொண்டே இருப்பார்கள். அதோடு ஒவ்வொரு புகைவண்டி கிலேயத்திலும் அரிஜன் நிதிக்காகப் பணம் வசூல் செய்து கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். சமையல் வேறு செய்ய வேண்டும். இவற்றிற்கெல்லாம் இடைஞ்சலாக இருக்கும் என்பதற் காக மனுகாங்தி இரட்டைப் பெட்டியைத் தே ர் ங் தெடுத்தாள்.

வண்டி பாடலிபுத்திரத்தை விட்டுக் காலை 9.30 மணிக் குப் புறப்பட்டது. காந்தியடிகள் கோடை நாட்களில்