பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

283

காலை 10 மணிக்கே நடுப்பகல் உணவு உண்பது வழக்கம். எனவே உணவு சமைப்பதற்காக மனு அடுத்த பெட்டிக்குச் சென்றாள். சிறிது நேரம் கழித்துக் காங்தியடிகளின் பெட்டிக்கு வங்தாள். அவர் அவசரமாக ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். பிறகு தலைநிமிர்ந்து! இவ்வளவு நேரம் எங்கு சென்றிருந்தாய்?” என்று கேட்டார்.

“கான் உங்களுக்காக அடுத்த பெட்டியில் சமைத்துக் கொண்டிருக்கிறேன்’ என்றாள் மனுதி. உடனே காங்தி யடிகள் சன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்தார். அவளேயும் எட்டிப் பார்க்குமாறு சொன்னர். உடனே தான் ஏதோ பெரிய தவறு செய்து விட்டதை உணர்க் தாள். வெளியில் எட்டிப்பார்த்தாள். இடமில்லாமல் படிக்கட்டிலெல்லாம் மக்கள் கின்று கொண்டு வந்தார்கள். “அடுத்த பெட்டியும் வேண்டுமென்று நீ கேட்டாயா?” என்று கேட்டார் காங்தியடிகள்.

“ஆமாம்! நான் இங்கு சமையல் செய்வதாலும், பாத்தி சங்களைத் துலக்குவதாலும் உங்களுக்குத் தொல்லேயாக இருக்கும் என்பதற்காக இரட்டைப் பெட்டி கேட்டேன்’ என்றாள் மனு.

‘இது கொண்டிச் சமாதானம்! குருட்டுத்தனமான அன்பு! நீ என்மேல் கொண்ட அன்பின் காரணமாக எவ்வளவு பேர் வெளியில் அவதிப்படுகிறார்கள். அன்பு இவ்வாறு குறுகிய அளவில் இருக்கக் கூடாது. இன்னும் உயர்ந்த கிலேயில் இருக்க வேண்டும்’ என்று கடிந்து கொண்டார் காங்தியடிகள்.

மனுகாந்தியின் உடம்பு நடுங்கியது. அவள் கண்களி. லிருந்து கண்ணிர் வழிந்தது. அவளால் எதுவும் பேச முடிய வில்லை. செயலற்று நின்றாள்.

“நீ இவ்வாறு அழுவதில் பயனில்லே. அழுவது திருந்துவ தாகாது. அந்தப் பெட்டியிலிருக்கும் பொருள்களை இங்கு