பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

285

பற்றுக்கொண்டு விளங்கினர். ஏதேனும் ஒழுங்கீனமான, துய்மையற்ற செயலே யாராவது செய்தால், தாமே அச் செயலேத் தூய்மைப்படுத்துவதன் மூலம் பிறருக்குப் பாடம் கற்பிப்பார்.

நவகாளியில் ஒவ்வொரு ஊரிலும் குறுகலான சங்துகள் கிறைய இருக்கும். அவற்றின் வழி யு ம் மோசமாக இருக்கும். அதல்ை காங்தியடிகள் தாங்கலுக்காகக் கையில் ஒரு தடியை வைத்துக் கொண்டு நடப்பார். கடக்கும் வழியில் அசுத்தம் ஏதாவது தென்பட்டால் அதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியாது. ஒருநாள் அசுத்தமான பாதையில் அவர் கடங்து செல்ல நேர்ந்தபோது, ஒரு இலை யைக் கையிலெடுத்து அங்கு கிடந்த எச்சில், மலம் முதலிய வற்றை அப்புறப்படுத்தத் தொடங்கினர். அவரைச் சுற்றி யிருந்த கிராமவாசிகள் அக்காட்சியைக் கண்டு வாயடைத்து கிண்றனர்.

அருகிலிருந்த மனு மிகவும் கோபங்கொண்டு, ‘பாபு! எண்னே ஏன் நீங்கள் இப்படி அவமானத்துக்கு உள்ளாக்கு கிறீர்கள்? நான் உங்கள் பின்னல் கின்று கொண்டு தானே இருக்கிறேன்? என்னைக் கூப்பிட்டு இச் செயலைச் செய்யு மாறு பணிக்கக் கூடாதா?’ என்று கேட்டாள்.

உடனே காந்தியடிகள் சிரித்துக்கொண்டு, “நான் இப் பணியைச் செய்வதன் மூலம் எவ்வளவு மகிழ்ச்சியடை கிறேன் என்று உனக்குத் தெரியாது. பிறரைக் கூப்பிட்டு இச் செயலைச் செய்யும்படி சொல்வதை விட நானே செய்வது எவ்வளவு எளிது என்பதை நீ அறியமாட்டாயா?” என்று கூறினர்

“இருக்கலாம்! ஆளுல் நீங்கள் செய்வதை இவ்வூர் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்களே! அவர்கள் என்னேப்பற்றி என்ன கினேப்பார்கள்?’ என்று மனு கேட்டாள்.