பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289

அதுதான் அவர்கள் கடவுள்; இல்லே, கடவுளேயும் அவர் களேயும் இணைத்து வைக்கும் இடைப் பொருள். அச் சிறு பொருளேயும் அவர்களிடமிருந்து பிடுங்கி எறிந்து விட்டால், அவர்களுக்குக் கடவுளேப்பற்றிய சிங்தனையே இல்லாமல் போய் விடும்” என்று கூறினர் காங்தியடிகள்.

உடனே தாகூர், ‘காங்திஜி! நீங்களும் உங்கள் சமண முன்னேர்களும் பாடுவதையும், பஜனை செய்வதையும், பாசிமணி உருட்டுவதையும் விட்டுவிட்டீர்கள். கடவுள் கோயிலில் மட்டும் அல்ல; எல்லா இடங்களிலும் இருக் கிறார் என்பதை நாம் அறிவோம். ஆண்டவன், நெற்றி வியர்வை நிலத்தில் வீழப் பாதை அமைக்கும் பாட்டாளி யிடம் இருக்கிருன். அவனும் அவ்வேழைகளோடு வெயி லில் காய்கிருன்; மழையில் கனகிருன். ஆண்டவன் ஆடை களும் அவர்களுடைய ஆடைகளைப் போன்று அழுக்கடைங் தவை; புழுதி படிந்தவை! இவ்வுண்மையை விளக்குவதற் காகத்தான் ஆண்டவன் எசுவாக-மனிதனகப் பிறந்து உலகத் துன்பங்களை எல்லாம் ஏற்றார் என்று பாதிரியாருக் குத் தெரியும். எனவே ஆண்டவன் கம்பால் எப்பொழுதும் இணைக்கப்பட்டிருக்கிருன். அதற்காக அவனே கான் கல் லாக்க விரும்பவில்லை. நாம் அமர்ந்திருக்கும் இவ்வறையில் மணிகளும், சாயம் பூசப்பட்ட நடுகற்களும், உருவவழி பாடு நமக்குத் தேவைப்படாதபோது, பிற மக்களுக்கு எதற் காக? எவ்வளவு தாழ்த்தப்பட்ட மனிதனுக இருந்தாலும் சரி, உருவவழிபாடு அவனுக்குத் தேவை இல்லை என்று கருதுகிறேன். ஒவ்வொரு நகரிலும், சிற்றுாரிலுமுள்ள கோவில்களில் கல்லிலுைம், பித்தளேயாலும், மரத்தாலும், பளிங்கிலுைம் காட்டப்பட்டுள்ள எல்லா உருவங்களையும் கொண்டுவங்து ஓரிடத்தில் குவித்து, அதை இறுதியில் கடலில் கொட்டி நம் காட்டைப் புனிதப்படுத்த விரும்பு கிறேன்,’ என்று கூறி முடித்தார்.