பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292

“நீ கேரே கரகத்துக்குப் போவாய்!” என்று சபித்துக் கொண்டே, காங்தியடிகள் கொடுத்த காசை வீசி எறிந்தார் பண்டா.

காந்தியடிகள் இதல்ை உள்ளம் கலங்கவில்லை. “என் னுடைய கதி எப்படியானலும் ஆகட்டும்; ஆச்சாரியராகிய தாங்கள் இப்படிப் பேசுதல் தகாது. வேண்டுமென்றால் தம்பிடியை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அதுவும் போய்விடும்!” எண்ருர்.

“தொலைந்துபோ ! உன் தம்பிடி இங்கே யாருக்கு வேண்டும்?” என்று திட்டினர் பண்டா.

“கமக்கு ஒரு தம்பிடி லாபம், பண்டாவுக்கு இழப்பு’ என்று காங்தியடிகள் கினைத்துக் கொண்டு தம்பிடியைத் திருப்பி எடுத்துக் கொண்டு புறப்பட்டார். ஆல்ை பண்டாவா விடுகிறவர் ? காந்தியடிகளைக் கூப்பிட்டு, “கானும் உன்னைப் போல கடந்துகொள்ளலாமா? அங்தத் தம்பிடியை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உனக்குப் பாவ மல்லவோ வங்து சேரும். கொடுத்துவிட்டுப் போ!’ என்றார். காந்தியடிகள் அவ்விதமே கொடுத்துவிட்டுத் திரும்பினர்.

இங்கிகழ்ச்சியை விவரித்துவிட்டுக் காங்தியடிகள் இறுதியில் எழுதியிருப்பதாவது ;

“ஆண்டவன் கருணையில் யாருக்கேனும் ஐயமிருக்கு மால்ை, அவர் இத்தகைய புண்ணிய இடங்களைப் போய்ப் பார்ப்பாராக. இறைவன் தன் பெயரால் நடக்கும் எத் துணை அக்கிரமங்களேயும், ஏமாற்றுச் செயல்களேயும் பொறுத்துக் கொண்டிருக்கிருன்! மனிதன் விதைப்பதை அறுக்கிருண்! வினேப்பயனே அநுபவிக்காமல் தப்ப யாரா அலும் முடியாது இதில் ஆண்டவன் தலையிடவேண்டிய அவசியமே இல்லை. சட்டத்தை இயற்றிவிட்டு அவன் அப் புறம் சென்றுவிட்டான் என்றே கூறலாம்."