பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

பிரதிநிதி பக்கத்தில் இருந்தார். அவரிடம் தம்மால் வழக்கு கடத்த முடியாதென்றும், வேறொரு வக்கீலை அமர்த்திக் கொள்ளும்படியும் சொல்லிவிட்டு வெளியேறினர்.

  • *

பம்பாய் நகரில், சர்கவாஸ்ஜி ஜிஹாங்கீர் மண்டபத் தில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குப் பம்பாயின் சிங்கமான சர் பிரோஸிஷா மேத்தா தலைமை தாங்கினர். தென்னப்பிரிக்க இந்தியர்களின் துன்பத்தைப் பற்றி அக்கூட்டத்தில் காங்தியடிகள் பேச இருந்தார். சம் சொற்பொழிவை அச்சடித்துக் கொண்டு காந்தியடிகள் வந்திருந்தார். அச்சிடப்பட்ட அச்சொற் பொழிவைப் படிப்பதற்காக அடிகள் எழுங்தார். அவர் உடல் காற்றில் பட்ட மாங்தளிர்போல் படபடக்கத் தொடங்கியது. தலைமை வகித்த பம்பாயின் சிங்கம் “உரக்கப் படியுங்கள்” என்று அடிக்கடி உறுமியது; உற் சாகப் படுத்தியது. இதல்ை காங்தியடிகளின் குரல் இன்னும் மெலிந்தது. உடனே சர் பிரோஸிஷா மேத்தா வின் தலைமைச் சீடரான திரு. டி. வாச்சா அச்சொற் பொழிவைத்தாம் வாங்கிப் படித்தார். இதே காங்தியடிகள் தாம், தம் சொல்லாற்றலால் ஆங்கில அரசாங்கத்தைத் திணற அடித்தார். இலட்சக்கணக்கான மக்கள் அடங்கிய கூட்டத்தைத் தம் சொல் என்னும் மங்திரக் கயிற்றால் பிணித்தார்.

29. திருமணம்

காங்தியடிகளுக்குத் திருமணம் மிக இளமையிலேயே கடைபெற்றது. அவர் மணம் குழங்தை மணம். அதைப் பற்றிப் பின் வருக்தி எழுதியிருக்கிறார். அவைகளைப் பின் கண்டவாறு தொகுத்து வரைகிறேன்: