பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

361

“பதின் மூன்றாம் வயதில் எனக்குத் திருமணம் கடந்தது என்ற செய்தியை மிகவும் வருத்தத்துடன் தெரி வித்துக் கொள்கிறேன். அதே வயதுள்ள சிறுவர்கள் பலர் இப்போது என்னிடம் வளர்ந்து வருகின்றனர். அவர்களேப் பார்க்கும்போதெல்லாம், என்னுடைய கதியை நினைத்து இரக்கமும், அவர்களுக்கு என் கதி கேராமலிருப்பது குறித்து மகிழ்ச்சியும் கொள்கிறேன். இவ்வளவு இளம் வயதில் மண முடித்தல் கியாயமென்று ஆதரிக்க, அறவழிப் பட்டவாதம் எதுவும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.”


“இந்துக்களுக்குள் திருமணம் என்பது சாதாரணச் செய்தியன்று. திருமணத்தால் குடும்பமே அழியப் பெறு வோர் பலர். மணமகன், மணமகள் இருவரின் பெற்றாேர் களும் இதில் தங்கள் பொருளையும் காலத்தையும் வீணுக்கு கிறார்கள். திருமணம் என்றால், அதற்குப் பல மாதங் களுக்கு முன்னிருந்தே பொருள்கள் சேகரிக்கவும், துணி மணிகள் நகைகள் தயாரிக்கவும், விருந்துகளுக்குத் திட்டம் போடவும் தொடங்கி விடுகிறார்கள். யாருடைய விருங்தில் பலகாரங்கள் அதிகம் என்பதில் போட்டி. பெண் மணிகள் குரல் நன்றாயிருந்தாலும், இல்லாவிட்டாலும், பாடித் தீர்த்துத் தொண்டையைப் புண்ணுக்கிக் கொண்டு, சில சமயங்களில் நோய்வாய்ப் படுகிறார்கள். அண்டை அய லார்க்குப் பெரும் தொங் தரவு, ஆனால் அவர்கள் வாய் திறப்பதில்லை. கூச்சல், குழப்பம், குப்பை, அழுக்கு எல்லா வற்றையும் அண்டை அயலார் பொறுமையுடன் சகித்துக் கொண்டிருப்பர். ஏனெனில் அவர்களும் இவ்வாறு கூத் தடிக்கும் காலம் ஒன்று வருமன்றாே?”

sk

‘திருமணத்துக்கு ஆயத்தம் செய்யப்படுவதினின்று தான், எனக்கும் திருமணச்செய்தி தெரிய வங்தது. திருமண