பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80$

ஏற்பட்ட அநுபவமே, இப்பிறவியில் பிறருடைய அறிவுரை யைத் தேவையில்லாமல் செய்து விடுகின்றது, வரவர ஒரு வரையொருவர் கண்கு அறிந்து கொள்ளலாைேம். தாராள மாகப் பேசவும் பழகவும் தொடங்கிைேம். இருவரும் ஒத்த வயதுடையவர்களே! இருந்தாலும் கணவனுடைய அதி காரத்தைச் செலுத்த நான் தயங்கியதில்லை.”

 *

காந்தியடிகள் குழங்தை மனத்தின் கொடுமைகளை விளக்கியிருப்பதை அறிந்தோம். சமயம் நேரும்போதெல் லாம், சிறுவயதில் மக்களுக்குத் திருமணம் செய்ய வேண் டாம் என்று எச்சரிப்பார். குழங்தை மணம் செய்துவைத்த பெற்றாேர்களைக் கண்டிக்காமலுமிருக்கமாட்டார். காந்தி யடிகள் கதர்ப்பிரசாரச் சுற்றுப் பயணத்திற்காக 1939ஆம் ஆண்டு தென்னட்டுக்கு வந்தார். ஆந்திரா சென்றிருந்த போது பட்டாபி சீதாராமய்யாவின் வீட்டில் தங்கியிருங் தார். பட்டாபி சீதாராமய்யாவின் மருமகளுக்கு வயது பன்னிரண்டு. அவளும் வீட்டிலிருந்தாள். உடனே காங்கி யடிகள், “என்ன? உங்கள் மகன் 12 வயதுள்ள தன் மனைவியோடா இங்கு வாழ்கிருன்? இது ஏற்றதல்ல!” என்று கூறினர்.

‘இல்லையே! யார் கூறியது?’ என்றார் சீதாராமய்யா.

“ஆல்ை, அப்பெண் உங்கள் வீட்டில் அல்லவோ இருக் கிருள்” என்றார் காங்தியடிகள்.

“ஆமாம்! அவள், அவளுடைய தங்தை, தாயார், பாட்டி, சகோதரிகள் ஆகிய எல்லோருமே இங்குதான் இருக்கிறார்கள். அவர்கள் இதே ஊரில்தான் வாழ்கிறார் கள். அவர்கள் வீடும் சிறிது துாரத்தில் தான் இருக்கிறது. அவர்கள் எல்லோரும் உங்களை அருகில் வந்து காண வேண்டும் என்பதற்காக வந்திருக்கிறார்கள்’ என்று விளக்