பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$0

கிளுர் சீதாராமய்யா. அதன் பிறகே காந்தியடிகள் திருப்தி யடைந்தார்.


1945-ஆம் ஆண்டு காங்தியடிகளின் சேவாக்கிராமத்தில் இந்துமதி-தெண்டுல்கர் என்பாருக்குத் திருமணம் நடை பெற்றது. திருமணத்தை கடத்தி வைத்தவர் காங்தியடிகள். அப்போது, அவர் மதச்சம்பிரதாயங்களே யொட்டியோ, அல்லது அரசியல் சட்டத்தை ஒட்டியோ அத்திருமணத்தை கடத்தவில்லை. வாழ்க்கையை ஒட்டி, ஆழ்ந்த கருத்துப் புலப்படுமாறு கடத்தினர். வடநாட்டு இந்துக்களின் திருமணத்தில் ‘சப்தபதி என்ற சடங்கு குறிப்பிடத் தக்கது. மணமக்கள் எதிர்கால வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஏழு கொள்கைகளே அது வற்புறுத்துகிறது. அவ்வேழு செயல்களையும் கடைப்பிடிப்போம் என்று உறுதி கூறுவதோடு, அப்போது செய்து ம் காட்ட வேண்டும். ஆனல் இந்துத் திருமணங்களில் பண்டைக் காலங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வங்த சப்தபதி சடங்கு பொருளற்றது; திருமண நிகழ்ச்சிகளில் அது ஒரு அங்கமே தவிர, வாழ்க்கைக்குப் பயன்படாதது. காங்தியடிகள் அச் சடங்கிற்குப் புத்துருவம் கொடுத்தார். சப்தபதி சடங்கின் போது மணமக்கள் இருவரும் இணைங்து ஏழு பணிகளேச் செய்யுமாறு ஏவினர். அப்பணிகளாவன: பகவத்கீதை படித்தல், நூல் நூற்றல், ஆன்காத்தல், கிணற்றடியைக் கழுவல், உழவுத்தொழில் செய்தல் முதலியன. திருமணம் இக்துஸ்தானியிலேயே நடைபெற்றது. (தமிழகத்தைப் போல் அங்கும் வடமொழியிலேயே புரோகிதர் மங்திரம் சொல்வது வழக்கம். ஆனல் காந்தியடிகள் அதிலும் புரட்சி செய்தார். தமிழ்த் திருமண முறையைக் கேலி செய்யும் கண்பர்கள் காங்தியடிகளின் செயலை உற்று உணர்வார் களாக.) அத் திருமணத்தை கடத்தி வைத்த புரோகிதர் ஒரு அரிஜன் என்பது குறிப்பிடத் தக்கது. அதுவும் அவர்