பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

305

இந்துவல்ல; கிறித்தவர். இத் திருமணத்தில் காங்தியடிகள் வற்புறுத்தியதெல்லாம் ஒழுக்கமே.

so so

இராமேசுவரி நேருவின் மகனுக்குத் திருமண ஏற்பாடு சிகழ்ந்து கொண்டிருந்தது. மணமகனும் மணமகளும் வேறு வேறு சமயத்தைச் சார்ந்தவர்கள். எ ன .ே வ திருமணத்தை எந்த முறையில் கடத்துவது என்ற ஐயப் பாடு எழுங்தது. காந்தியடிகளிடம் இதைப்பற்றிக் கூறி, யோசனை கேட்டபோது, அடிகள் பின்வருமாறு குறிப் பிட்டார் : -

“இந்து என்ற சொல் புதிது. இது நமக்களிக்கப்பட்ட லேபிள். கம்முடைய சமயத்தின் உண்மைப் பெயர், “மானவதர்மம்': அதாவது ‘மனித சமயம். மனித சமயத் தின் சட்ட நூல் மனுநீதி. இச் சமயத்தின் ஊற்று வேதங்கள். மனித சமயம் காலப்போக்கில் மாறிக் கொண்டே வந்தது. ஆங்கிலர் ஆட்சி இங்கு எற்படுவதற்கு முன் கம் சமுதாயமானது அடிக்கடி காலத்திற்கேற்ற மாற்றங்களைப் பெற்றுத் திருங்தி வங்தது. ஆனல் ஆங்கில அரசாட்சி, அவைகளின் போக்கைத் தடுத்து கிறுத்திச் சட்டமாக்கி விட்டது. காலத்தால் மாற வேண்டியவை, மாற முடியாத நிலையில் அமைந்து விட்டன. அப்படி ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆங்கி லேயரால் நிறுவப்பட்ட சட்டசபைகளிலுைம், உயர்நீதி மன்றங்களாலும் ஏற்பட்டவையே! இச் சட்டங்களால் இந்து சமுதாயம் உணர்விழந்திருக்கிறது. இங்கிலையில் மக்கள் சட்டங்களைப் பொருட்படுத்துவது கூடாது. பழைய சம்பிரதாயங்களையும் தாக்கி எறிய வேண்டும். ஒழுக்கத் திற்கு ஒத்துவராத ஆங்கிலச் சட்டத்தைப் புறக்கணித்து விட்டு, மனித சமயத்தின் அடிப்படையில் திருமணத்தை கடத்த வேண்டும். அதனால் உண்டாகக் கூடிய இன்னல் களையும் ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்.”