பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

வளவு எளிதான செயலல்ல. காங்தியடிகள் கிழவர்தான். ஆனல் அவர் கடை விரைவுகடை (Double march).

32. சத்தியாக்கிரகம்

1906-ஆம் ஆண்டு காங்தியடிகளின் வாழ்க்கையில் சத்தியாக்கிரகக் கொள்கை குடிப்புகுந்தது. காங்தியடிகள் தென்னுப்பிரிக்காவில் இக்தியர் கலனுக்காகப் போராட்ட இயக்கம் கடத்திக்கொண்டிருந்தாரல்லவா? அவ்வியக்கம் *பாசிவ் ரெசிஸ்டன்ஸ் என்ற பெயராலேயே குறிப்பிடப் பட்டது. அந்தக் காலத்துத் தமிழ் எடுகளில் அதை “எதிர்க்காமல் எதிர்க்கும் முறை என்றும், “சாத்விக எதிர்ப்பு’ என்றும் மொழிபெயர்த்து வங்தார்கள். இந்தியர் கள் கடத்திவந்த இந்த இயக்கத்தை ஆங்கிலப் பெயரால் குறிப்பிட்டு வங்தது காங்தியடிகளுக்கு பிடிக்கவில்லை. இந்திய மொழியில் பெயர் கொடுக்கவேண்டுமென்பதற்கு, வேறொரு முக்கியமான காரணமும் ஏற்பட்டது. ஒரு பொதுக்கூட்டத்தில் தென்னப்பிரிக்க இந்தியர்களின் கட்சியை ஆதரித்துப் பேசிய ஒர் ஆங்கிலேயர், “இந்தியர் கள் சிறு தொகையினர்; பலமற்றவர். அதனல் பாசிவ் ரெசிஸ்டன்ஸ்'முறையைக் கையாளுகிறார்கள். பலவீனர்கள் வேறு என்ன செய்ய முடியும்?’ என்று பேசினர். இதைக் காந்தியடிகள் கேட்டுக்கொண்டிருந்தார். தாம் கைக் கொண்ட போர்முறை பலவீனங் காரணமாக ஏற்பட்ட தல்ல என்பது காங்தியடிகளின் உறுதியாகும். எனவே :பாசில் ரெசிஸ்டன்ஸ் பலவீனர்களுடைய இயக்கம் என்று கருதப்பட்டபடியால் தம் இயக்கத்தின் பெயரை உடனே மாற்றிவிட வேண்டும் எனத் தீர்மானித்தார். புதிய பெயர் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என்று இண்டியன் ஒபினியன்’ பத்திரிகையில் விளம்பரம் செய்தார். இந்த அதிசயமான பரிசுப் போட்டியில் கலந்து