பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317

சூரியன் காட்சி கொடுக்கக் கருணை செய்வதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். அத்தகைய காட்களில் சூரியன் மெதுவாக மேகத்தின் பின்னலிருந்து எட்டிப் பார்த்தால், ஒட்டமாக உள்ளே ஒடி அன்னேயிடம் தெரிவிப்போம். ஆளுல் அவர் ஒடிவங்து பார்ப்பதற்குள் சூரியன் மறைந்து விடும். அதனலென்ன மோசம்? இன்று நான் சாப்பிடுவது ஆண்டவனுக்கு விருப்பமில்லை என்று கூறிக்கொண்டு மலர்ந்த முகத்துடன் மீண்டும் வீட்டு வேலையைக் கவனிக் கத் தொடங்கிவிடுவார்.”

மேலே கூறியவை யாவும் காங்தியடிகள் தம் அன்னே யாரைப் பற்றிக் கூறியவை. அன்னேயார், தம் வாழ்க்கை யில் கடைப்பிடித்த உண்ணு கோன்பு அடிகளின் வாழ் விலும் வேரூன்றிவிட்டது.

 : .

உண்ணு கோன்பு காந்தியடிகளின் கையில் ஒரு அரிய ஆயுதமாகப் பயன்பட்டது. அக் கருவியைப் பயன்படுத்தி அரசியல் போராட்டங்களிலும் சரி; சமுதாயப் போராட் டங்களிலும் சரி; அரிய வெற்றி கண்டார். தென்னப்பிரிக் காவில் ஒரு கண்பரிடம் நன்கொடை வசூலுக்குச் சென் மிருந்தாரென்றும், பின்னிரவு வரை சாப்பிடாமல் இருந்து தம் காரியத்தைக் காங்தியடிகள் சாதித்தார் என்றும் காம் முதலிலேயே படித்தோம்.

காங்தியடிகள் சம்பரானில் குடியானவர்களின் குறை களே வெற்றிகரமாகத் தீர்த்து வைத்துவிட்டு ஆமதாபாத் வந்தார். ஆமதாபாத்தில் ஆலேகள் மிகுதி. அங்கிருந்த ஆகிலத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரிக் கிளர்ச்சி செய்து வந்தார்கள். திருமதி அனுகுயா பென் அக்கிளர்ச் சியைத் தலைமை தாங்கி கடத்தி வந்தார். தொழிலாளர் களின் கட்சியில் கியாயம் இருப்பதை உணர்ந்த காங்தி