பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

மோட்டார்களின் மீது கற்கள் வீசப்பட்டன-மோட்டார் வண்டிகளும், டிராம்களும் எரிக்கப்பட்டன. சாராயக் கடைகளுக்கும் போலீஸ் கிலேயங்களுக்கும் தீ வைக்கப் பட்டது. (சாராயக் கடைகள் பெரும்பாலும் பார்சிகளால் கடத்தப்பட்டன.) சில பார்சி பெண்களும் தாக்கப் பட்டனர்.

மறுநாள் காலேயில் பார்சிகளும், ஆங்கிலோ இந்தியர் களும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அரசாங்கத்திடம் அதுமதி பெற்றுக் கொண்டனர். பிறகு இந்தியர்களும் முஸ்லீம்களும் வாழ்ந்த பகுதிகளில் புகுந்து தாக்கத் தொடங்கினர். இதையறிந்த இந்துக்களும் இசுலாமியர் களும் பழையபடி தடிகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பி ஞர்கள். கண்ட இடங்களிலெல்லாம் பார்சிகளைத் தாக்கத் தொடங்கினர். பார்சிகளும் ஆங்கிலோ இந்தியர்களும் வாழும் இடங்களைத் தேடிப் போகவும் தொடங்கினர். இக் கொடுமைகளே உணர்ந்த காங்தியடிகள் கண்ணிர் வடித் தார். மக்களின் அறியாமைக்காகப் பெரிதும் வருங்கினர். “இனிமேல் சுதந்திரம் கிட்டும் வரையில், ஒவ்வொரு திங்கட் கிழமையும் இருபத்து கான்கு மணி நேரம் உண்ணுவிரதம் இருக்க முடிவு செய்திருக்கிறேன்” என்று கூறினர்.


காந்தியடிகள் 1922-ஆம் ஆண்டு பர்தோலியில் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பிப்பதற்கான பெரு முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அவ்வாண்டு பிப்ரவரி 12-ஆம் தேதியில் தொடங்குவதென்று முடிவு செய்திருந்தார். பிப்ரவரி 8-ஆம் தேதி எதிர்பாராத பேரிடி ஒன்று விழுந்தது. ஐக்கிய மாநிலத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் செளரி-செளரா என்ற ஒரு சிறு பட்டணம் உள்ளது. அவ்வூரில் வெறி கொண்ட ஒரு கூட்டம் அங்கிருந்த காவல் கிலேயத்தைத் தாக்கி கெருப்பு வைத்து. இருபத்தொரு போலீஸ்காரர்