பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.3

சீதபேதியால் வருந்திக்கொண்டிருந்தபோது, மருத்துவர் பல முறை கேட்டும் தாம் நலமாக இருப்பதாகவே கூறினர்; மருந்து உட்கொள்ளவும் மறுத்துவிட்டார்.

இராசகோட்டையில் சத்தியாக்கிரகம் கடந்துகொண் டிருந்தபோது மணிபென் படேலும், மிருதுலா சாாபாய் ஆகிய இருவரும் சிறை செய்யப்பட்டனர். சத்தியாக்கிர கத்தைத் தொடர்ந்து கடத்துவதற்காகக் கஸ்தூரிபாய் இராசகோட்டைக்கு அனுப்பப்பட்டார். அச்சமயத்தில் ராமதாஸ் காங்தி (காங்தியடிகளின் மகன்) யின் ஆண் குழந்தையொனறை கஸ்தூரிபாய் வளர்த்து வந்தார். கஸ்துரிபாய் இராசகோட்டைக்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு அக்குழந்தை பாட்டி பாட்டி” என்று அமுக் தொடங்கிவிட்டது. அதன் அழுகையை நிறுத்தப் பலரும் பல வழியில் முயன்றனர்; பயனில்லை. காந்தியடிகளோ இடையருத அலுவலில் மூழ்கியிருந்தார். இருந்தாலும் சிறுவனின் அழுகையை நிறுத்தாமல், அவரால் வேலையைத் தொடர்ந்து செய்ய முடியாதுபோலிருந்தது. உடனே அச் சிறுவனே எடுத்து மடியில் வைத்துக்கொண்டார். ‘பாட்டி வருவாள்; அழாதே கண்ணு’ என்று கூறினர். பையன் சிறிது கேரம் சிரித்துக்கொண்டிருந்தான்; மீண்டும் அழத் தொடங்கிவிட்டான். அடிகளின் உள்ளத்தில் ஒருயோசனை தோன்றியது. ஒரு துளசிமணி மாலையை எடுத்துச் சிறு வனின் கையில் கொடுத்தார். “பாட்டி பாட்டி என்று கூறிக்கொண்டே இம்மாலையை உருட்டு’ என்றுசொன்னர். சிறுவனும் சிறிது நேரம் அவ்வாறே செய்தான். பிறகு கண்ணேத் திறந்தான். பாட்டியைக் காணவில்லை. ‘எங்கே பாட்டி?” என்று காங்தியடிகளைக் கேட்டான்.

‘கண்ணு! துருவனின் கதையைக் கேட்டிருக்கிருயா? அவன் கண்ணபிரானேக் காண எத்தனையோ ஆண்டுகள் கண் திறக்காமல் தியானம் செய்தான். நீ அதற்குள்ளாகக்