பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

கண் திறந்துவிட்டாயே! அடிக்கடி கண்களைத் திறக்கக் கூடாது. மெய்மறந்து தியானத்தில் ஈடுபட வேண்டும்” என்று உபதேசம் செய்தார் காந்தியடிகள்.

சிறுவன் மீண்டும் கண்களே மூடிக்கொண்டு பாட்டி யின் தியானத்தில் ஈடுபட்டான். இப்படியே இரண்டு காட்கள் கழித்தன. மூன்றாம் நாள் சிறுவனக் கஸ்தூரி பாயினிடம் கொண்டு சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அடிகளின் இச் செயலே நாம் என்னவென்று கூறுவது? கஸ்தூரிபாய் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருக் கிறார். அவர் திரும்பி வந்து இச் சிறுவனச் சீக்கிரம் அடையப் போவதில்லை என்பது அடிகளுக்கும் தெரியும். ஆல்ை அச்சிறுவனின் எண்ணத்தை வேறு பக்கம் திருப்பித் தொல்லையைக் குறைப்பதற்காக ஒரு பொய் சொன்னர். அவ்வளவுதான். இதைத்தான் ‘பொய்ம்மையும் வாய்மை யிடத்த’ என்றார் வள்ளுவர்.


“சத்தியத்தினும் சிறந்த சமயம் ஒன்றில்லை என்பது என் பிறழாத உறுதி.’

“ஒரு காணயத்தின் ஒருபக்க முத்திரை அன்பு. மற்றாெருபக்க முத்திரை உண்மை.”

‘இவ்வுலகில் எவர்க்கும் யான் அஞ்சேன், ஆண்டவன் ஒருவனுக்கே கான் அஞ்சி கடப்பேன்; எவரிடத்தும் பகை கொள்ளேன்; எவரது அங்யாயத்துக்கும் இணங்கேன். பொய்ம்மையைச் சத்தியத்தால் வெல்வேன்; பொய்ம்மை யோடுபோராட எல்லாத் துன்பங்களையும் ஏற்பேன்’இவை காங்தியடிகள் சத்தியத்தைப்பற்றி உதிர்த்த முத்துக்கள்.