பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அஹிம்சை

காங்தியடிகள் உலகிற்கு வழங்கிச் சென்ற அரும் பொருள்-ஒப்பற்ற பொருள்-யாது என்று கேட்டால் அஹிம்சை என்று எல்லோரும் ஒருமுகமாகக் கூறுவர். ஆல்ை, இக்கொள்கை நம் காட்டிற்குப் புதியதன்று. “அஹிம்சா பரமோ தர்ம’ என்ற அருள்வாக்கை முதன் முதலில் உலகிற்கு வழங்கியவர் கம்காட்டைச் சேர்ந்த விருஷப தேவர். அவருக்குப் பின் இக்கொள்கையை வற்புறுத்திய பெரியார்கள், புத்தரும் சோக்ரதரும், இயேசுவும், திருவள்ளுவரும், திருநாவுக்கரசரும் கால்ஸ் தாயும் ஆவர். திருவள்ளுவர், அன்புடைமை, அருளுடைமை. கொல்லாமை, புலால் மறுத்தல், கண்னேட்டம், தவம், வெருவங்த செய்யாமை ஆகிய பல அதிகாரங்களில் இவ்வருளறத்தை வற்புறுத்திச் சொல்லுகின்றார். புத்த, சமண சமயங்கள் தோன்றி நம் காட்டில் பரவி யிருந்த ஒரு சில நூற்றாண்டுகளில் அஹிம்சையானது, அச் சமயங்களேச் சார்ந்த துறவிகளால் மட்டும் கடைப்பிடித்து ஒழுகப்பட்ட ஒரு கொள்கையாக விளங்கியது. பின் அங் கிலேயும் அழிந்து விட்டது. தற்காலத்தில் ஈவிரக்கமற்ற வட்டிக்கடைக்காரர்களாகச் சமணர்கள் விளங்குகிறார்கள். சீன நாட்டில் வாழ்ந்த பெளத்தக்குருமார்கள் கொடுமைக் கும், ஏமாற்றுக்கும் பெயர் பெற்றவர்களாக விளங்கினர்கள் என்று வரலாறு கூறுகிறது. நம்டநாட்டிலும்- சமண சமயத்தார்-திருநாவுக்காசர்_போன்ற_பெரியார்களுக்கு இழைத்த கொடுமைகளே அறிவோம்.

“ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைத் திருப்பிக் கொடு” என்ற இயேசுவின் அருள் மொழி, விவிலியடநூலுக்கேடகனிச்சிறப்பைக்டகொடுக்கும் உயர் மொழி. பரலோகத்திலுள்ள பரமபிதாவின் பெருமையைக்