பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

வெளியே தள்ளச் சொல்லட்டுமா?” என்று சிறிஞர் அதிகாரி.

“நல்லது! போலீஸ்காரன் வரட்டும். நானுக இந்த வண்டியிலிருந்து நகரப்போவதில்லை” என்றார் காந்தி.

இரயில்வே அதிகாரி கூறியது வெறும் மிரட்டலல்ல, உண்மையாகவே போலீஸ்காரன் வந்தான். காங்தியடி களின் கையைப் பிடித்து இழுத்து வெளியில் தள்ளின்ை. அவருடைய பெட்டி படுக்கைகளும் வெளியில் வீசி எறியப் பட்டன. எடுத்தெறியப்பட்ட சாமான்களில் கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு பிரயாணிகள் தங்கும் அறைக் குச் சென்றார். சாமான்களே யெல்லாம் இரயில்வே ஊழி யர்கள் எடுத்து வைத்தனர்.

தென்னுப்பிரிக்கா குளிர்காடு. மேலும் உயரமான பகுதிகளில் குளிர் மிகவும் கடுமையாக இருக்கும். மேரிட்ஸ் பர்க் மிகவும் உயரமான இடத்தில் அமைந்திருந்தது. பொறுக்கமுடியாத குளிர்; பனி கொட்டியது. அப்போது இரவு 9 மணி இருக்கும். எலும்பிலும் குத்திப் பாயும் கடுங்குளிரைத் தாங்கிய வண்ணம் கடுங்கிக்கொண்டே அங்கிருந்த இருட்டறையில் இரவைக் கழித்தார். குளிருக் குப் பயன்படும் கம்பளிக்கோட்டு பெட்டிக்குள் இருந்தது. அதையாவது எடுத்துவரலாம் என்று கிளம்பினர். ஆனல் அங்கும் ஒரு வெள்ளே உருவம் கின்றது. மீண்டும் அவமா னத்திற்குள்ளாக நேரிடுமோ என்ற அச்சத்தால் பேசாமல் திரும்பிவந்துவிட்டார். அவர் உள்ளத்தில் பல எண்ண அலைகள் மோதின. அதை அடிகள் பின்வருமாறு வெளி யிடுகிறார் :

வண்டி-ஒடியது. குளிர்-என்னேக்டஇ=இே. தென்னுப்பிரிக்காவிலேயே)இங்கி இந்தியரின் அடிமை

-->-.....

விலங்கைத் தகர்த்தெறியப் போராடுவதா? அல்லது தாய் காட்டிற்கே திரும்பி விடுவதா? என்ற் எண்ணத்தில் என்