பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

  • εποπιο ασωπιειμ”. ஆப்பெழுதுண்டனஆவாம் வில் படிந்து கிடந்த அஹிம்சை செயலில் மலர்ந்தது.’


காங்தியடிகள் தென்னுப்பிரிக்காவில் வாழ்ந்த காலத் தில், டர்பன் ககரிலிருந்து பிரிடோரியாவுக்கு நெடுகிலும் புகைவண்டிப் பாதை கிடையாது. டர்பனிலிருந்து சார்லஸ் டவுனுக்குப் புகை வண்டியில் சென்று, அங்கிருந்து ஜொகன் னஸ்பர்க்கிற்கு குதிரை வண்டியில் செல்ல வேண்டும். ஜொகன்னஸ்பர்க்கில் மீண்டும் புகை வண்டி ஏறிச் செல்ல வேண்டும். அடிகள் சார்லஸ் டவுனில் இறங்கினர். அவரிடம் பீடனுக் (குதிரை வண்டி) குரிய டிக்கட் இருந்தது. வண்டி யின் தலைவன் நிறத் திமிர் பிடித்த ஒரு வெள்ளேயண். அவன் காங்தியாரைக் கண்டதும், ஒரு கறுப்பனை கம் வண்டியில் ஏற்றுவதா? என்று எண்ணினன். ஏதேனும் சாக்குப் போக்குச் சொல்லிக் காந்தியடிகளை வண்டியில் ஏறவிடாமல் தடுக்க வேண்டும் என்று திட்டமிட்டான். “உன்னுடைய பயணச் சீட்டு கேற்றையது. இன்று செல்லாது. அடுத்த வண்டியில் வா’ என்று கூறிஞன்.

காந்தியடிகள் அச்சீட்டுச் செல்லும் என்ற காரணத்தை விளக்கிக் கூறித் தம்மை வண்டியில் அவசியம் ஏற்றிக் கொள்ளத்தான் வேண்டும் என்று வாதாடினர். இவ் விடாக்கண்டரை ஏமாற்ற முடியா தென்பதை உணர்ந்த அவ்வண்டித் தலைவன் காங்தியாருக்கு வண்டியில் இடம் கொடுக்க வேண்டியதாயிற்று. ஆனல் வண்டிக்குள் இடம் கொடுக்க வில்லை. வண்டியோட்டி (ஒரு நீக்ரோ) உட்காரு மிடத்தில், வெளியிலேயே உட்காருமாறு சொன்னுன். அவைேடு வாதம் செய்தால் வீண் சச்சரவுக் கிடமாகும் என்பதை உணர்ந்த அடிகள். அந்த அவமானத்தைப் பொறுத்துக் கொண்டு வண்டியோட்டியின் அருகிலேயே அமர்ந்து கொண்டார். வண்டியும் புறப்பட்டது.