பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

சென்றதும் உனக்குச் சரியான பாடம் கற்பிக்கிறேன்” என்று உறுமுவதுமாயிருந்தான். இருள் சூழ்ந்த பிறகு வண்டி ஸ்டாண்டர்டனே அடைந்தது. வண்டி கின்ற இடத்தில் சில இந்தியர்கள் கின்று கொண்டிருந்தார்கள். அவர்களைக் கண்ட பிறகுதான் அடிகளின் உள்ளத்தில் சிறிது ஆறுதல் ஏற்பட்டது. பெருமூச்சுடன் வண்டி யிலிருந்து இறங்கினர். உடனே அங்கிருந்த இந்தியர்கள் அடிகளைச் சூழ்ந்து கொண்டு வரவேற்றார்கள்.


பிரிடோரியாவில் காங்தியடிகள் வாழ்ந்து வந்த போது மாலை வேளைகளில் காள்தோறும் உலாவச் செல்வது வழக்கம். சாலேயின் இருமருங்கிலும் கடையாகச் செல் வோருக்கென்று கெட்டியான நடைபாதை அமைக்கப்பட் டிருக்கும். அப்பாதையின் வழியாகவே காங்தியடிகள் நாள் தோறும் கடந்து செல்வார். அவர் செல்லும் பாதையின் ஒரத்தில் பிரிடோரியாவின் பேரமைச்சர் திருவாளர் குரூகர் என்பாரின் வீடு அமைந்திருந்தது. அவ்வீடு மாளிகையன்று; எளிய தோற்றத்தையுடையது. எப்போதும் அதன் வாயிலில் ஒரு காவற்காரன் கின்று கொண்டிருப்பது வழக்கம். இதைக் கொண்டே அது ஒரு அமைச்சரின் வீடு என்று உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாள்தோறும் காங்தியடிகள் அவ்வழியாக கடந்து சென்றதை அக் காவல்காரன் பார்த்திருக்கிருண். ஒருநாள் திடீரென்று அவன் நிறத் திமிர் தலைவிரித்து ஆ ட த் தொடங்கிவிட்டது. ஒருகால், காவற்காரன் புதியவனுகவும் இருக்கலாம். நேராக அவன் காங்தியடிகளே நோக்கி ஓடி வங் தான். தன் செருப்புக் காலால் எட்டி உதைத்தான். ‘ஏய்! கருப்புக் கூலி! உனக்கு என்ன திமிர்! முதலமைச்சர் குடி யிருக்கும் வீதியில் நடக்க உனக்கு என்ன துணிச்சல்” என்று சிறின்ை. எதிர்பாராமல் உதைபட்ட காங்தியடிகள்