பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

காந்தியடிகள் பிறக்கும்போதே 'மகாத்மா' வாகப் பிறக்கவில்லை. நம்மைப் போல் சாதாரண மனிதராகவே பிறந்தார். அதோடு குற்றமுள்ள மனிதராகவும் இளமையில் வாழ்ந்தார். ஆனால், தம்முடைய நல்லொழுக்கத்தாலும், சத்தியத்தாலும் தம்மை மகாத்மாவின் நிலைக்கு உயர்த்திக் கொண்டார். இது பெரிய சாதனையல்லவா! இத்தகைய பெரியாரின் வாழ்க்கை உலகிற்கு ஒரு அரிய கருவூலமாகும்.


மேலும் இந்நூற்றாண்டில் வாழ்ந்த பெரியார்களில் அவர் தலைசிறந்தவர். இந்நூற்றாண்டைக் ‘காந்தியின் நூற்றாண்டு” என்று கூறினாலும் பொருந்தும்.உலகில் எவ்வளவோ பெரியார்களும், அறிஞர்களும், கலைஞர்களும், கவிஞர்களும், வீரர்களும் வாழ்ந்திருக்கிறார்கள்.இவர்களில் பலர்-நூற்றுக்கணக்-