பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

மிகவும் கல்லவர். நேர்மையுள்ளம் படைத்தவர். இலஞ்சம் வாங்கும் அதிகாரிகள்மேல் நடவடிக்கை எடுத்துக்கொள்வ தாகக் கூறினர். ஆனல் அதே சமயத்தில் வேருென்றையும் காங்தியாரிடம் சொன்னர். ஆசிய இலாகா அதிகாரிகள் குற்றவாளிகள் என்று வழக்குமன்றத்தில் உண்மைப் படுத்தப்பட்டாலும் அவர்கள் தண்டனையிலிருந்து தப்பி விட வழியுண்டு. ஏனெனில் ஜூரிகள் அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கமாட்டார்கள். வழக்கு மன்றத்தில் அமர்ந்திருக்கும் ஜூரிகள் வெள்ளேயர்கள். ஆகையில்ை, வெள்ளேயர்கள் வெள்ளேயர்களுக்கு மாருகத் தீர்ப்பளிக்க மாட்டார்கள். நாம் வழக்குத் தொடர்ந்தும் பயனில்லை.” என்று கூறினர்.

காங்தியடிகள், முடிவைப்பற்றிக் கவலேப்படவில்லை. தம் கடமையைச் செய்வதில் கண்ணும் கருத்துமாயிருங் தார். “நாம் செய்ய வேண்டியதைச் செய்து விடுவோம். முடிவை ஆண்டவன் பொறுப்பில் விட்டு விடுவோம்” என்று கூறினர். உடனே போலீஸ் அதிகாரி ஆசிய இலா காவைச் சேர்ந்த இரண்டு பேர் மீது வாரண்டு” பிறப் பித்தார். அவ்விருவர் மீது சரியான சாட்சியங்கள் கிடைத் திருந்தன. இச் செய்தியைக் கேட்டதுமே, அவ்விருவரில் ஒருவர் திரான்ஸ்வால் மாகாணத்தை விட்டே ஓடிவிட்டார். பிறகு அவரும் கைப்பற்றிக் கொணரப்பட்டார். வழக்கு ஆரம்பமாயிற்று. அவர்கள் குற்றம் உண்மையென கிரு பிக்கப்பட்டது. இருந்தும் பயனென்ன? ஜூரிகள் விடுதலே செய்துவிட்டனர். வழக்கின் முடிவைக் கண்ட காங்தி யடிகள், மனம் வருந்தினர். திேயை கிலேகாட்ட வேண்டிய நீதிமன்றம், அதிேக்கு ஆக்கமளித்தால் அவர் எவ்வாறு பொறுப்பார்: வழக்கறிஞர் தொழிலின் மீதே ஒருவகை வெறுப்பு அவருக்கு ஏற்பட்டது.

இருந்தாலும் அவர் முயற்சி வீண் போகவில்லை. அவர்கள் விடுதலை பெற்றாலும், குற்றவாளிகள் என்ற