பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



எழுதியிருக்கிறார். அந்நூலில் கூறப்படும் கொள்கைகள் காங்தியடிகளின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்தன. காங்தி யடிகளின் வாழ்க்கையையே அந்நூல் மாற்றியமைத்து விட்டது என்று கூறலாம். காந்தியடிகளின் நெருங்கிய நண்பர்களுள் கல்லன்பேக் என்பவரும் ஒருவர். அவர் ஜெர்மானியர். அவர் 1100 ஏக்கர் நிலப்பரப்புள்ள ஒரு உழவுப் பண்ணேயை வாங்கி யிருந்தார். அவ்விடத்தில் ‘தால்ஸ்தாய் பண்ணை”, 1910-ஆம் ஆண்டு மே திங்கள் 10-ஆம் நாள், காந்தியடிகளால் துவக்கப்பட்டது. தால்ஸ் தாயின் மீது தாம் கொண்டிருந்த பெருமதிப்பின் காரண மாகவே காந்தியடிகள் அவ்வாறு பெயரிட்டார்.

சத்தியாக்கிரக இயக்கத்தில் ஈடுபட்டு, அல்லலுற்ற இந்தியக் குடும்பத்தினரெல்லாம் அப்பண்ணேயில் காங்தி யடிகள் குடியேற்றினர். எல்லோரையும் அதில் பாடுபடு மாறு செய்தார். அதில் கிடைத்த வருவாயைக் கொண்டு எல்லோரும் வாழ்க்கை நடத்தினர். தால்ஸ்தாய் பண்ணே யில் வாலிபர்களும் கன்னியர்களும் கிறைய இருந்தனர். எல்லோரும் மனவேறுபாடு எதுவுமின்றி அன்பாய்ப் பழக வேண்டுமென்று அடிகள் விரும்பினர். இளமைக் கோளாறி ல்ை எவ்விதத் தவறும் நேர்ந்து விடாது என்ற நம்பிக்கை யும் அவருக்கிருந்தது. இருந்தாலும் அங்கு வசித்த இளம் பெண்களின் பாதுகாப்புக்குத் தாம் பொறுப்பு என்பதை உணர்ந்து, அவர்களுடைய நடவடிக்கைகளேக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து வங்தார்.

ஒருநாள் உள்ளத்திற்குக் கவலே தரும் நிகழ்ச்சி யொன்று நடந்தது. பண்ணையில் வாழ்ந்த வாலிபர் சிலர் இரண்டு இளம் பெண்களிடம் சற்று எல்லேமீறிப் பரிகாசச் சொற்களைப் பேசிவிட்டனர். இது போன்ற கிகழ்ச்சி மறுபடியும் நேராமலிருப்பதற்கு என்ன வழி என்று அடிகள் சிங்தனே செய்தார். அந்த இளைஞர்களேக் கூப்பிட்டு அறிவுரை வழங்கினர். அத்தோடு அவர் மனம்