பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

அமைதியுறவில்லை. ஒருநாள் இரவெல்லாம் தூங்காமல் சிந்தித்தார். அவருடைய உள்ளத்தில் ஒரு யோசனை வெளிப்பட்டது. கேலிப் பேச்சுப் பேச விரும்பும் இளைஞர் களுக்குச் சரியான முறையில் புத்தி புகட்டி எச்சரிக்கை செய்யக்கூடியதாக அந்த யோசனை அமைந்திருந்தது.

மறுநாள் காலேயில் கேலிக்கு உள்ளான அவ்விரு பெண்களையும் அழைத்தார். “அருமைக் குழந்தைகளே! நேற்று உங்களைப் பார்த்துச் சில இளைஞர் கேலி செய்தன ரல்லவா? இதை எண்ணி நேற்று இரவெல்லாம் எனக்கு உறக்கமே வரவில்லை. அவர்களுக்குச் சரியான பாடம் கற்பிக்க வேண்டும். அப்பாடம் மற்றவர்களுக்கு எச்ச ரிக்கையாகவும் அமைய வேண்டும். இதற்காக உங்களை ஒரு தியாகம் செய்யும்படி கேட்கிறேன். உங்களுடைய தலையில் அழகாக நீண்டு வளர்ந்துள்ள கூங்தலை வெட்டி விட விரும்புகிறேன். அவ்வாறு வெட்டி விட்டால், உங்களைப் பார்க்கும் போதெல்லாம் தங்களுடைய தவற்றை கினேங்து அவ்விளைஞர்கள் வருங்துவார்கள். பண்ணையில் மீண்டும் இத்தகைய குற்றம் நேராது. பண்ணேயின் நன்மைக்காக உங்களை இக்கடின சோதனைக்கு உட்படுத்த விரும்புகிறேன். உங்களுக்குச் சம்மதமா? என் வேண்டு கோளுக்காக இத் தியாகத்தை மேற்கொள்ளுவீர்களா?” என்று கேட்டார்.

கூந்தலை இழக்க எங்தப் பெண்தான் இசைவாள்? கூந்தலேயே சிறந்த அழகுச் சாதனமாக இந்தியப் பெண்கள் கருதுவர். பலவிதமாக அதனை ஒப்பனே செய்து மகிழ்வர். எனவே அப்பெண்கள் சிறிது தயக்கம் காட்டினர். அங்தப் பெண்களின் தாய்மார்களோ திடுக்கிட்டனர். மகாத்மா அப் பெண்களைப் பார்த்து, ‘உங்களை நான் வற்புறுத்த விரும்பவில்லை, உங்களுக்கு விருப்பமில்லே யென்றால் வேண்டாம்” என்று கூறி மறுபடியும் தம்முடைய கோக்கம் என்னவென்பதை விளக்கிக் கூறினர். இறுதியில் அப்