பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

காள்தோறும் மாலே வேளையில் தவருது வந்து, காங்தியடி களே கலன் விசாரித்துச் செல்வது வழக்கம். அடிக்கடி அடிகள்பால் அவர் உரையாடுவதும் உண்டு. ஒருநாள் திருவாளர் குவின் காந்தியாரை நோக்கி, “ஐயா! நான் தங்களிடம் குஜராத்தி கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனக்குக் கற்றுக் கொடுக்கிறீரா?” என்று கேட்டார், அடிகளும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். காள் தோறும் மாலேயில் குஜராத்தி வகுப்பு கடந்தது. சில நாட் களில் குவின் எரவாடாவிலிருந்து வேறிடத்துக்கு மாற்றப் பட்டார். அவர் புறப்படும் போது அடிகளிடம் வந்தார்.

“ஐயா! தயவு செய்து ஒருதாளில் தங்களுக்குப்பிடித்த மான குஜராத்திச் சொற்றாெடர் ஒன்றை எழுதிக் கொடுங் கள். அதை கான் அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்க விரும்புகிறேன்” என்று கேட்டார். அடிகள்_சிறைத் கைதிகளிடம் அன்பு காட்டு.-எல்லே மீறிச் சினம்_கொள் ளும் நேரங்களில்,_சினத்தையடக்கிப் பொறுமை கொள்’

என்று எழுதிக் கொடுத்தார்.”

இதே குவின், விசாபூர் சிறைச்சாலையின் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்த போது, குஜராத்தி அரசியற் கைதிகள் சிலர் அங்கு இருந்தனர். ஏதோ ஒரு காரணத்தால் குவினுக்கும் அவ்வரசியற் கைதிகளுக்கும் சச்சரவு ஏற்பட்டது. குவின் மிக்க சினம் கொண்டார். கைதிகளே அடக்கத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய நிஆனந்தார். அச்சமயம் சட்டைப் பையில் கைவிட நேர்ந்த போது காந்தியடிகள் எழுதிக் கொடுத்த காகிதம் தட்டுப் பட்டது; எடுத்துப் படித்தார்; அவர் சினம் தணிந்தது: கைதிகளும் உயிர்தப்பினர்.


1934-ஆம் ஆண்டு மே திங்கள் காங்தியடிகள் அரிஜன

முன்னேற்றத்தின் பொருட்டு வட இந்தியாவில் ஒரு