பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv


கானவர்-தம்வாழ்க்கை வரலாற்றை எழுதியிருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் கூட, தம் உள்ளத்தை அப்படியே பிளந்து முழுதும் தெரியக் காட்டியவர் இருக்க முடியாது.எவராக இருந்தாலும், தாம் செய்த குற்றத்தைக்குறைத்தும்,நன்மையை மிகைப்படுத்தியும் கூறுதல் இயல்பே. ஆனால் காங்தியடிகள் வழக்கமான அத் தவற்றின் பால் படியவில்லை. விலைமாதின் இல்லத்திற்குச் சென்றதைக்கூட ஒளிவு மறைவின்றி எழுதும் நாணய உணர்வைக் காந்தியடிகளிடம் தான் காண முடியும். அவருள்ளத்திற் படர்ந்திருந்த சிறு மயிரிழைகூட, உலகின் கண்களினின்றும் மறைக்கப்படவில்லை,

உலகப் பொருளாதாரத்தையே மாற்றியமைத்த பேரறிஞர் காரல் மார்க்ஸின் தத்துவத்தை எல்லோரும் அறிவர். அவருடைய கொள்கையை மார்க்ஸியம் என்று அழைக்கிறோம். அதேபோலக் காந்தியடிகளின் கொள்கைகளைக் 'காங்தியம்’ என்ற பெயரால் உலக மக்கள் அழைக்கின்றனர். இந்நூலில் காந்தியக் கொள்கைகளைப் பல கூறுகளாக்கி அவற்றை பல தலைப்புகளால் விளக்கி ஒவ்வொன்றுக்கும் அடிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளையே எடுத்துக்காட்டுகளாக அமைத்திருக்கிறேன். முதலில் அடிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து நூலாக்க விழைந்தேன். பிறகு கொள்கை-