பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

அப்பொழுது பதினெட்டு வயது கூட கிரம்பாத ஒரு இளைஞன் அடிகளேப் பார்த்து, ‘"சமயத்தாலும், பண் பாட்டாலும் வேறுபட்ட இரண்டு சமுதாயங்கள் ஓரிடத் தில் ஒன்றி வாழ்ந்ததாக உலக வரலாற்றில் எங்கும் காண முடியாது. இந்துக்களும் இஸ்லாமியர்களும் அடிக்கடி சண்டையிடுவதை நான் பிறந்த நாளிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினன்.

அதைக் கேட்டுக் காந்தியடிகள் புன்முறுவல் பூத்தார். அவ்விளைஞனே நோக்கி, “தம்பி! நீ என்னே விட வயதில் முதிர்ந்தவனல்ல. இந்து சமயத்தைச் சார்ந்த சிறுவர்கள் இசுலாமியர்களே மாமா’ என்று உறவு பாராட்டி அழைப்பதை நான் பலதடவை கேரில் பார்த்திருக்கிறேன். இரு சமுதாயனத்தினரும் வாணிப, சமுதாய நடவடிக்கை களிலும் முக்கிய கிகழ்ச்சிகளிலும் நட்புறவோடு சேர்ந்து பணியாற்றுவதைக் கண்டிருக்கிறேன். என்னே இவ்விடத் திலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று நீங்கள் எண்ணு கிறீர்கள்; கட்டாயப்படுத்துகிறீர்கள். நான் எப்போதும் பலாத்காரத்தை எதிர்ப்பவன்; ஆகையில்ை உங்கள் பிடிவாதத்திற்கு கான் ஒருபோதும் இணங்கமாட்டேன். நீங்கள் விரும்பினுல் என் பணியைத் தடை செய்யலாம்; என் சீனச் சிறை செய்யலாம்; ஏன்? கொன்றும் விடலாம். ஆனல் நான் வெளியிலிருந்து எவ்விதத் துணையையும் அழைக்கமாட்டேன். போலீசையோ பட்டாளத்தையோ கூப்பிட்மாட்டேன். நான் இந்துக்களுக்கு எதிரி என்று நீங்கள் கினைக்கிறீர்கள். கான் மனச் சாட்சிக்கு விரோத மில்லாமல் கூறுகிறேன். கான் யாருக்கும் எதிரியல்ல. நான் தொடங்கியிருக்கும் பணி தவருனது என்று என் உள்ளம் ஏற்றுக் கொள்ளுமாறு, நீங்கள் எடுத்து விளக்கினல் நான் இவ்விடத்தை விட்டுச் சென்று விடுகிறேன். கடைசியாக உங்களுக்கு ஒன்று கூற விரும்புகிறேன். பெயராலும், செயலாலும், பண்டாட்டாலும், சமயத்தாலும் நான் ஒரு