பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

இந்து. அப்படியிருத்தும் போது-எண்டசொங்த சமயத்திற்கே நான் எதிரியாக இருப்பேனு?..உங்கள்.குறுகிய எண்ணத் தைக் கைவிடுங்கள் என்று உளமுருகிச் சொன்னுர்,

காந்தியடிகள் இறுதியில் சொன்ன சொற்களைக் கேட்ட அவ்விளைஞர்கள் மகுடிக்கடங்கும் பாம்பு போல் அடங்கிவிட்டனர். அதே இளேஞர்கள் காங்தியடிகளுக்குப் பாதுகாவலாக ஹைதரிமாளிகையைச் சூழ்ந்து கொண்டு இரவில் காவல் புரிந்தனர். ‘ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். உண்மையில் இக் கிழவன் பெரிய சூனியக் காரன். எல்லோரும் இவன் சொல்லுக்குத் தோற்றுவிடு விடுகிரு.ர்கள், இவன் யாருக்கும் தோற்பதில்லை’ என்று அவ்விளைஞர்களின் வாய் மு.ணு முணுத்தது.


நமக்குத் தீமை செய்தவரை மன்னிப்பதோடு அஹிம் சையின் கடமை தீர்ந்து விடவில்லே. அவனிடத்தில் அன்பு காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அஹிம்சை முழுமை பெறுகிறது. ஜாலியன் வாலாபாத் படுகொலேயுைப் பற்றி அறியாக இந்திய மக்கள் இருக்க முடியாது. இதைப் பஞ்சாப் படுகொலே என்று சொல்லுவர். பாக் (Bagh) என்ற சொல்லுக்குத் தோட்டம் என்று பொருள். இது ஒரு இந்திச் சொல். ஆணுல் ஜாலியன் வாலாபாக்கில் அப்போது மரம் செடி கொடி எதுவும் கிடையாது. அது ஒரு வெட்ட வெளி. சீக்கியர்களின் புண்ணிய நகரமான அமிருதசரஸில் அவ்விடம் அமைந்துள்ளது. அவ்வெட்ட வெளிக்குச் சுற்றுச் சுவர்கள் கிடையாது. ஆனல் மூன்று பக்கங்களில் உயரமான மாடிவீடுகள் அமைந்திருக்கின்றன. அம் மாடி வீடுகளின் பின்புறத்து நெடுஞ்சுவர்கள் அவ்வெளியைச் சுற்றிக் கோட்டைச்சுவர் போல் அமைங்கிருந்தன. ஒரே ஒரு பக்கத்தில் மட்டும் உயரமான மதிற் சுவர் அமைந்திருந்தது. அவ்வெளியினுள் நுழைவதற்கும், வெளிச் செல்வதற்கும்