பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



வேண்டுமானுலும், மறுபடி திரும்பி வீட்டுக்கு வரவேண்டு மாலுைம் வயிற்றில்ை ஊர்ந்து செல்ல வேண்டியதாயிற்று.

அமிருதசளில் ஜெனரல் டயர் ஏற்படுத்திய இராணுவ வழக்குமன்றத்தின் ஆணைகளை மீறியதற்காக 298 பேர் விசாரணைக்குட்படுத்தப் பட்டார்கள். அவர்களில் 51 பேருக்கு மரணதண்டனையும், 49 பேருக்கு ஆயுள் முடிய தீவாந்திர தண்டனையும், 79 பேருக்கு 7 ஆண்டுச் சிறையும் கிடைத்தன.

ஜெனரல் டயரின் அரக்கச் செயல்களைக் கேட்டு இந்திய நாடே கொதித்தெழுந்தது. நாடெங்கும் கண்டனத் தீர்மானங்களும், ஊர்வலங்களும் கடந்தன. மக்களின் கிளர்ச்சி பொங்குமாங்கடல் போல் பொங்கி எழுங்ததை உணர்ந்த ஆங்கில அரசாங்கத்தார் வேறு வழியின்றிப் பஞ்சாப் படுகொலேயைப்பற்றி விசாரிக்க ஒரு குழுவை ஏற்படுத்தினர். இந்தியத் தலைவர்களில் பலர் டயருக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று வற்புறுத் தினர். அதைத் தானே எல்லோரும் எதிர்பார்ப்பார்கள்? ஜெனரல் டயருக்கு எண்ன தண்டனே வழங்கலாம் என்று கம்மைக் கேட்டால் நாம் என்ன சொல்வோம்? ‘தூக்கி லிட்டுக் கொல்வது ஜெனரல் டயருக்குக் குறைந்த தண்டனே! அவனைத் தெருவில் வீட்டு, வெறிநாயைக் கொல்வது போல் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும்; முச்சந்தியில் இரும்புக் கம்பம் காட்டி, அதில் அவனேப் பிணித்துத் தீயிட்டுக் கொளுத்த வேண்டும்; அல்லது அங்கம் அங்கமாக வெட்டிக் காக்கைக்கும் கழுகுக்கும் விருங் தாக்க வேண்டும்’ என்று தயங்காமல் சொல்லுவோம். ஆனல் காந்தியடிகள் என்ன கூறினர் தெரியுமா “ஜெனரல் டயரைத் தூக்கிலிட்டுக் கொல்லக் கூடாது; வேலேயிலிருந்து விலக்கினுலே போதும்’ என்று கூறினர்.