பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

“கான் போர்வையின் நான்கு முனைகளையும் சேர்த்துப் பாம்போடு தூக்கி எறியப் போகிறேன்” என்று சொன்னர் ராவ்ஜி. பாம்பு தோளிலிருந்து மெதுவாக இறங்கிப் போர் வைக்குள் சென்று மறைந்தது.

‘கான் மிகவும் அமைதியோடு இருக்கிறேன். ஆனல் நீங்கள் உங்களுக்குத் திங்கு நேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்று எச்சரிக்கை செய்தார் அடிகள். ராவ்ஜி போர்வையை மெதுவாகச் சுருட்டிப் பாம்புடன் அப்புறப்படுத்தினர்; பாம்பும் ஒடிவிட்டது.

அடுத்தநாள் இச் செய்தி, செய்தித்தாள்களில் பல் வேறு உருவங்களுடன் வெளிப்பட்டது. “ஒரு நாகப்பாம்பு காங்தியடிகளின் முதுகின் வழியாகக் தோள்மேல் எறியது. பின் தலைமேற் சென்று, தன் படத்தை விரித்து அவருக்குக் குடைப்பிடித்தது. இது அவருடைய எதிர்கால வாழ்வின் நற்குறி. அவர் இந்திய காட்டின் பேரரசராக எதிர்காலத் தில் முடிசூட்டிக்கொண்டு அரியணையில் வீற்றிருப்பார்” என்ற கதை கட்டிவிட்டனர். இச்செய்தியைப் படித்த காகா காலேஸ்கர், அதை அடிகளிடம் காண்பித்தார்.

“பாம்பு உங்கள் தோளின்மேல் இருந்தபோது தாங் கள் என்ன நினைத்தீர்கள்?’ என்று கேட்டார் காகா.

அதற்கு அடிகள், “ஒரு கணம் அச்சத்தால் என் உள்ளம் கடுங்கியது. ஆனுல் ஒரேகணம் தான்! அடுத்த கணம் அச்சம் நீங்கி அமைதியுற்றேன். ஒருகால் அப்பாம்பு என்னேக் கடித்துவிட்டால், அதை அடிக்கவேண்டாமென்று அருகிலிருந்தவர்களுக்குக் கூறவேண்டும் என்று அப் பொழுது எண்ணினேன். பாம்பை ஒரு மனிதன் கண்ட வுடன், அவன் உள்ளத்தில் தோன்றும் முதல் எண்ணம் அதைக் கொல்லவேண்டுமென்பது தான். நீங்களும் அப் படித்தானே எண்ணுவீர்கள். ஆல்ை என்னேக் கடித்த