பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

வேருென்று ஒடித்துக்கொள்ளலாம்” என்று அடிகள் கூறினர்.

சில சமயங்களில் பற்குச்சி மிகவும் சிறிதாகிவிடும். அதன் துணி மென்மையாகவுமிருக்காது. அதை வைத்துக் கொண்டு அடிகள் பல் துலக்குவார். அக்குச்சியினல் காங்தி படிகளின் வாயில் எஞ்சியிருந்த ஒரிரண்டு பற்களும் படும் பாட்டைக் காண காகாவிற்கு மிகவும் வருத்தமாக இருக்கும். ஆனல் பயன்?


அடிகள் அஹிம்சையை எவ்வளவு நுட்பமாகக் கடைப் பிடித்தார் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டைக்கூற விரும்புகிறேன். அடிகள் முதலில் குழங்தைகளுக்கு அரச வாழ்த்துச் சொல்லிக்கொடுப்பது வழக்கம். அஹிம்சை யின் நுட்பத்தை உணர்ந்த பின்னர் அவ்வாழ்த்தில் அமைக் திருந்த சில கொள்கைகள் அவருக்குப் பிடிக்கவில்லே அவை யாதெனில்:-"அவள் (அரசி) பகைவரைச் சிதறடிக் கட்டும்; அவரை அழிக்கட்டும்; அவர் அரசியலைக் குலேக் கட்டும்; அவர் வஞ்சகச் சூழ்ச்சிகளே நொறுக்கட்டும்’ என்பனவாகும்.

இக்கொள்கைகளே அடி சளின் அஹிம்சையுள்ளம் ஏற்றுக்கொள்ளவில்லை. ‘இவ்வுரைகள் எனக்குப் பிடிக்க வில்லை. எனது கருத்தை டாக்டர் பூத் என்பவருக்குத் தெரி வித்தேன். அஹிம்சையில் நம்பிக்கையுள்ள ஒருவருக்கு இப்பகுதியைப் பாட விருப்பு மெழாதென்பதை அவர் ஒப்புக்கொண்டார் பகைவர் எங்ஙனம் வஞ்சகாாவர்? பகைவர் என்பதாலேயே அவர்கள் தவறுடையவர்களா? ஆண்டவனிடத்திலிருந்து நாம் கியாயம் மட்டும் வேண்ட லாம். டாக்டர் பூத் என்னுடன் முற்றும் உடன்பட்டுத் தமது திருச்சபைக்கெனப் புதிய முறையில் ஓர் இராச வாழ்த்து எழுதிக்கொண்டார்” என்று காந்தியடிகள் தம்