பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



நெருங்கிய தொடர்புண்டு; அஞ்சாமையிலிருந்து தான் அஹிம்சை பிறக்கிறது என்பதை விளக்கவே, அஞ்சாமை என்ற தலைப்பை அஹிம்சையின் பின் வைத்தேன்.

அஹிம்சையைப் பற்றிக் காங்தியடிகள் விளக்கும் போது, அஹிம்சை அஞ்சாமையின் உச்சியில் நிலவுவது. ஹிம்சையில் தேர்ச்சி பெற்றவர்க்கு அஹிம்சையின் விழுப் பத்தை எளிதில் கிறுவிக்காட்டல் என்ல்ை இயலும். பல் லாண்டு யான் கோழையா யிருந்த பொழுது மூர்க்க நெறி யைக் கடைப் பிடித்திருங்தேன்; எனது கோழமையை உதிர்க்கத் தொடங்கிய போதே, அஹிம்சையையும் போற்றி மதிக்கத் தொடங்கினேன்.

அஹிம்சை கோழை கடைப்பிடித்து கடக்கத்தக்க கெறியன்று. அது சாவுக்கு அஞ்சாதான் கடைப்பிடித்து கடக்கும் தகுதி வாய்ந்தது. கையில் வாள் தாங்காதவன் அச்சம் இல்லாதவனே. ஆனல் அவனிலும் அச்சமில்லாத ஆண்டகையாளன் எவன்? தற்காப்புக்கென்று சிறு விரலே யும் உயர்த்தாது சாவை ஏற்பவன்.

அஹிம்சை கோழையின் ஆயுதமன்று; அது வீரனின் ஆயுதம். அஹிம்சையில் உறுதியுடையவன் ஆண்டவனிடத் தில் உறுதியுடையவன். உண்மையும் அஞ்சாமையும் அஹிம்சையின் தற்கிழமைப் பொருள்கள். அஹிம்சைக்கு ஆண்மை தேவை அதுவே வீரத்திற் சிறந்த வீரரின் அறம்,

இறக்க அஞ்சுகிறவன் மகாவீரரையோ புத்தரையோ வேதங்களையோ பின்பற்றுபவனல்லன். மகாவீரரும் புத்தரும் போர்வீரர்கள். தால்ஸ்தாயும் அவ்வினத்தவரே. ஹிம்சையின் இடையில் அஹிம்சையைக் கண்ட மேலோர், கியூடனேப்பார்க்கிலும் அறிஞர்கள்; அவர்கள் வெல்லிங் டனப் பார்க்கிலும் போர் வீரர்கள்-” என்று பலபடக் கூறுகிரு.ர்.