பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8.3

உங்கள் மனேவியையும் குழந்தைகளேயும் வண்டியில் ஏற்றி ரஸ்டம்ஜியின் வீட்டுக்கு முதலில் அனுப்பிவிடுங்கள். காம் நடந்து செல்லுவோம்’ என்று சொன்னுர்,

காந்தியடிகளுக்கு இலாப்டனின் யோசனை மிகவும் நல்லதாகப் பட்டது. திருடனைப் போல் இருளில் செல்வதை அவர் விரும்பவில்லை. தம் மனேவியையும் குழந்தைகளேயும் முதலிலேயே வண்டியில் ஏற்றி அனுப்பிவிட்டார். பின் கப்பல் தலைவரின் அனுமதியைப் பெற்றுக் கப்பலிலிருந்து இறங்கினர். துறைமுகத்திலிருந்து ரஸ்டம்ஜியின் வீடு இரண்டு கல் தொலைவு இருக்கும். இலாப்டனுடன் கடந்தே புறப்பட்டார். துறைமுகத்திலிருந்து சிறிது தூரம் சென்ற தும் சிறுவர்கள் காந்தியடிகளே இன்னரென்று அறிந்து கொண்டனர். உடனே “காந்தி! காந்தி’ என்று கூக்குரலிட்டனர். உடனே பெரியவர்களும் ஒன்று சேர்ந்து காங்தியைச் சூழ்ந்து கொண்டனர்.

கிலேமை மோசமாகிவிடும் என்பதை உணர்ந்த இலாப் டன், கடங்து செல்வதால் இனிப் பயனில்லே என்பதை உணர்ந்தார். அருகிலிருந்த ஒரு ரிக்ஷாக்காரனை அழைத் தார். காங்தியடிகள் எப்பொழுதும் மனிதன் இழுக்கும் வண்டியில் ஏறியதில்லை; ஏறவும் அவர் விரும்பியதில்லை. இலாப்டனின் வற்புறுத்தலுக்காக அரைமனதோடு வண்டி யில் ஏற ஒருப்பட்டார். அதற்குள் பெருங் கூட்டம் கூடி விட்டது. ரிக்ஷாக்காரனே மருட்டிச் சிலர் துரத்தி விட்டனர். இலாப்டனை இழுத்துப் புறம் விடுத்தனர். கூட்டம் காங்தியடிகளேச் சூழ்ந்து கொண்டது. வட்டமிட்ட வல்லுறுகளின் கடுவில் சிக்கித் தவித்த மாடப்புருவின் கிலேமை அவருக்கு ஏற்பட்டது. அவர் புனித மெய்யைப் புல்லர் பலர் பற்றினர்; கல்லால் எறிந்து காயப்படுத்தினர். அடிகளின் உடல் தளர்ந்தது; தலே சுற்றியது; கண்கள் சுழன்றன. கா வற்றியது. கீழே விழுந்து விடாமல் இருக்க