பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

அருகிலிருந்த ஒரு வீட்டின் முள் வேலியைக் கையால் பற்றிக் கொண்டார்.

அச்சமயம் டர்பன் நகரக் காவல் தலைவரான திருவாளர் அலெக்சாண்டரின் மனேவி அப்பக்கமாக வந்தார். வெறி கொண்ட கூட்டத்தைக் கண்டார். வெறி காயைச் சூழ்ந்து தாக்குவது போல், மெலிந்த ஒரு இந்தியரைப் பலர் கூடித் தாக்கும் வெறிச் செயலேக் கண்டார். காங்தியடிகளே அவருக்கு முன்பே தெரியும். கூட்டத்தை விலக்கிக்கொண்டு அடிகளிடம் சென்றார். தம் கைக்குடையை விரித்துப் பிடித்து அவருக்கு கிழல் செய்தார். அதற்குப் பிறகு அடிகள்ே அடிக்க யாரும் உள்ளம் துணியவில்லை. அம்மை யாரின் மீது அடிபடாமல் காந்தியடிகளே அடிக்கவும் அவர்களால் முடியவில்லை; செயலற்று கின்றனர். இதற் குள் அவ்வழியாக வங்த இந்தியர் ஒருவர், காவல் கிலேயத் திற்கு ஒடிச் செய்தியைத் தெரிவித்தார். அலெக்சாண்டர் சில காவலர்களே அனுப்பிக் கூட்டத்தைக் கலைத்தார். காங்தியடிகளையும் அவ்வெறியர்களின் ைக யி லி ரு ங் து மீட்டார். அன்று இரவு வரையிலும் காவல் கிலேயத் திலேயே தங்கிச் செல்லுமாறு வற்புறுத்தினர். ஆல்ை அடிகள் அதற்கு ஒப்பவில்லே. உயிருக்கு அஞ்சிக் காவல் கிலேயத்தில் அடைக்கலம் புக அவர் விரும்பவில்லை. காவலர் கள் அடிகளே ரஸ்டம்ஜியின் இல்லத்தில் கொண்டு போய்ச் சேர்த்தனர். அடிகளின் அவலகிலேயினேக் கண்ட ரஸ்டம்ஜி உள்ளம் வருந்தினர். கஸ்தூரிபாய் கண்ணிர் விட்டார். அவர் காயங்களுக்கு மருந்திட்டனர்; அடிபட்டுக் கன்றிப் போன இடங்களுக்கு ஒத்தடம் கொடுத்தனர். பலமான காயம் ஒன்று ஏற்பட்டிருந்தது; அதிலிருந்து குருதி வழிந்து கொண்டிருந்தது. அடியினுல் உடல் முழுதும் தழும்புகள் காணப்பட்டன. இவ்வளவோடு தொல்லே தீர்ந்தது என்று எண்ணினர். ஆனல் தொல்லே மீண்டும் தொடர்ந்தது.