பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g5

ரஸ்டம்ஜியின் வீட்டின் முன்பும் வெள்ளேக்கார வெறியர்கள் கூடிவிட்டனர். “காந்தியை வெளியே அனுப்பு’ என்று கூக்குரலிட்டனர். கேரம் ஆக ஆகக் கூக்குரல் வலுத்தது. வீட்டிலிருந்தோர் செய்வதறியாமல் திகைத்தனர். அலெக்சாண்டருக்குச் செய்தி எட்டியது: நேராக ரஸ்டம்ஜியின் வீட்டுக்கு வங்தார். கூட்டமோ மிகவும் பெரிதாக இருந்தது. அவர்கள் வெறியுணர்ச்சி எல்லே கடந்து இருந்தது. அவர்களே மருட்டித் துரத்துவது முடியாத செயல் என்பதை அறிந்தார்: ஒருகால் தொல்லே யாகவும் முடியலாம் என்று கருதினர். கூட்டத்தை அமைதியுறும்படி கேட்டுக் கொண்டார். வீட்டுக்குள்ளிருந்த காந்தியடிகளுக்கு ஒரு ஆள் மூலம் செய்தியனுப்பினர். அச் செய்தி இதுதான்:

‘உங்கள் நண்பரின் வீட்டையும், வீட்டிலுள்ள உடைமைகளையும், உங்கள் மனேவி மக்களேயும் காப்பாற்ற விரும்புகிறீர்களா? அப்படியால்ை நீங்கள் மாறுவேடம் பூண்டு இந்த வீட்டை விட்டுத் தப்பிச் செல்வது இன்றி யமையாதது. இதைத்தவிர இந்த இக்கட்டான கிலேயில் வேறு வழியே இல்லை!”

இந்தச் செய்தியைக் கேட்டதும் காந்தியடிகளின் உள்ளத்தில் பெரிய போராட்டம் எழுங்தது. மாறு வேடங் தாங்கிக் கோழையாய் வெளியில் செல்வதா? அல்லது எதிர் நோக்கியிருக்கும் துன்பத்திற்கு ஆட்பட்டு மடிவதா? என்பதுதான் அவர் உள்ளத்தெழுந்த போராட்டம், கோழையைப் போல் ஒளிந்து செல்ல அவர் விரும்பவில்லை. இருந்தாலும் தமக்காகத் தம் நண்பர் இன்னலுக்கு உள்ளாவதை விரும்பவில்லை. உடனே ஒரு இந்தியப் போலீஸ்காரனப் போல் உடை உடுத்துக் கொண்டார். தமிழகத்து அங்கவஸ்திரம் ஒன்றைத் தட்டின் மீது சுற்றி, அதைத் தலைக்குக் கவசமாக அணிந்து கொண்டார். இந்திய வணிகர்களைப் போல் மாறுவேடம் அணிந்திருக்த