பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89

காரர்கள் மீது ஏதோ கான் அவதூருகப் பொய்ப் பிரசாரம் செய்ததாக கம்பி அவர்கள் இம்மாதிரி நடங்து கொண்டிருக் கிறார்கள். உண்மையை உணரும்போது அவர்களே தங்க ளுடைய செயலுக்காக வருந்துவார்கள்.”

கிருஸ்துமஸ் விருந்தின் போது காந்தி படிகள் கப்பலில் என்ன சொன்னரோ அதைச் செயலில் காட்டிவிட்டார். காங்தியடிகள் வாய்ச்சொல் வீரரல்ல என்ற உண்மையை உலகம் உணர்ந்தது. கீழை காட்டின் அருளறம் அடிகளின் செயலில் வெளிப்பட்டு ஒளி வீசியது.


ஆப்பிரிக்காக்கண்டம் ஒரு மாகண்டம். பல இந்தியாவை அதனுள் அடைத்து விடலாம். தென்னப்பிரிக்கா மட்டும் இந்தியா அளவு பரப்புடையது. இந்தியாவிற்கு வழி கண்டுபிடிப்பதற்காகப் புறப்பட்ட “வாஸ்கோடகாமா என்பவன் தென்னுப்பிரிக்காவின் தெற்கு முனேயைக் கண்டறிந்து அதற்கு கன்னம்பிக்கை முனை (Cape of Goodhope) என்று பெயரிட்டான். அங்காட்டின் இயற்கை வளத்தை அறிந்த மேலே காட்டினர் பெரும் அளவில் அங்கு குடியேறத் தொடங்கினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கள் ஆங்கிலேயரும் டச்சுக்காரரும். தென்னுப்பிரிக்காவில் குடியேறிய டச்சுக்காரர்கள் போயர்கள்’ என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். ஆங்கிலேயர்களின் குடியேற்ற நாடு கள் கேப்காலனி, கேடால் என்று அழைக்கப்பட்டன. போயர்களின் குடியேற்ற நாடுகள் திரான்ஸ்வால், ஆரஞ்சு ஃபிரி ஸ்டேட் என்று அழைக்கப்பட்டன.

தென்னுப்பிரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்கள் ஏராளமான கிலங்களேத் தங்களுக்குச் சொந்தமென்று வளைத் துக் கட்டிக் கொண்டார்கள். ஆனல் அக்கிலங்கஆளப் பண்படுத்தி, விளங்லங்களாக்கிச் சாகுபடி செய்ய ஆட்கள்

ம. 6