பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9.3

வலுத்தது. ஒவ்வொரு ஊரிலும் இந்தியர்கள் பெருங்திர ளாகக் கூடிக் கண்டனக் கூட்டங்கள் கடத்தினர். கருப்புக் கொடிபிடித்துக் கொண்டு ஊர்வலம் கடத்தினர். அரசாங் கத்தாரும் பெரும் அளவில் அடக்கு முறையைக் கையாண் டனர்.

இறுதியில் திரான்ஸ்வால் மாகிலத் தலைவராக இருந்த தளபதி ஸ்மட்சு துரையவர்கள் சமாதானத்திற்கு வங்தார். ‘இந்தியர்கள் தாங்களாகவே வலுவில் சென்று தங்க ளுடைய பெயர் முதலிய விவரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்படிச் செய்ய அவர்கள் ஒப்புக் கொண்டால் கறுப்புச் சட்டத்தைத் திரான் ஸ்வால் அரசாங் கம் நீக்கி விடும்” என்று சொன்னர்,

எதிரியை கம்பவேண்டும் என்பது காந்தியடிகளின் கொள்கை. எனவே ஸ்மட்சு துரைக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்து, அவர் நாணயத்தைப் பார்க்க வேண்டும் என்று காங்தியடிகள் எண்ணினர். எனவே சமாதானத்துக்கு ஒப்புக் கொண்டார். காந்தியடிகளின் இச்செயல் பெரும் பாலான இந்தியர்களுக்கு வியப்பைக் கொடுத்தது. காங்தி யடிகள் சிறையிலிருந்து வெளிவந்ததும், இந்தியர்களே ஒன்று கூட்டி, “நாம் எல்லோரும் அலுவலகத்திற்குச் சென்று பதிவு செய்து கொள்ள வேண்டும்’ என்று சொன்னர்.

“இந்த காந்தி என்ன மனிதர்? இவரென்ன நினைத்த படி பேசுகிருரே! கறுப்புச் சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று சொன்னவரும் இவர்தான்: இன்று அதற்கு உடன் பட வேண்டும் என்று சொல்லுபவரும் இவர்தான். விங்தை யாக இருக்கிறது’ என்று பலர் சலித்துக் கொண்டனர். சிலர் எதிர்ப்பும் காட்டினர்.

திரான்ஸ்வால் மாநிலத்தில் சுமார் 50 பட்டாணி யர்கள் வாழ்ந்தார்கள். இவர்கள் இங்தியாவின் வடமேற்கு