பக்கம்:காந்தியின் வாழ்க்கையிலே.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

என்னைக் கொல்லும் பொருட்டுத் தாக்கிய சகோதரனும் பிற்காலத்தில் கட்டாயம் நான் குற்றமற்றவன் என்பதை உணர்ந்துகொள்வான்’ என்று கூறினர் காங்தியடிகள்.

பிப்ரவரி 10 ஆம் நாள் இந்திய சமூகத்தின் தலைவர்கள் முதன் முதலாகச் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று முடிவாயிற்று. காங்தியடிகள் பிடிவாத மாகத் தாமே முதலில் சென்று பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று, அலுவலகத்தை நோக்கிச் சென்றார், அவர் பதிவுச் சாவடியை நெருங்கியதும், மீர் ஆலமும் சில பட்டாணியரும் அங்கு வந்தனர். கையிலிருந்த தடியால் காங்தியடிகளேத் தாக்கினர். ‘ஹே ராம்” என்று கதறிய வண்ணம் அடிகள் மயங்கிக் கீழேவிழுந்தார். காங்தியடிகள் கீழேமயங்கிவிழுந்தும்கூட அப்பாவியர் அடிப்பதை கிறுத்த வில்லை. அருகிலிருந்த வெள்ளேயர்கள் மீர் ஆலத்தையும் அவன் கூட்டாளிகளையும் பிடித்துக் காவல் கிலேயத்தில் ஒப்படைத்தனர். காங்தியடிகளே அவருடைய நண்பரான டோக் பாதிரியாரின் இல்லத்துக்கு எடுத்துச் சென்றனர். அவருடைய கன்னம், உதடு எல்லாம் அடிபட்டுக் காயமாகி, அவைகளிலிருந்து குருதி கொட்டிக்கொண்டிருந்தது.

காங்தியடிகள் சிரித்துக்கொண்டிருப்பதுபோல் உள்ள சில படங்களே நாம் பார்த்திருக்கிருேம். அப்படங்களில் அவருடைய பல்வரிசையின் முன்பகுதி பொக்கையாக இருக்கும். அப்பொக்கை வாய்ச் சிரிப்பும் அழகாகத்தான் இருக்கும். அவருடைய முன்பற்களை உடைத்துப்பொக்கை யாக்கிய புண்ணிய கைங்கரியம், மீர் ஆலத்தினுடையது.

காங்தியடிகள் மயக்கம் தெளிந்து கண்விழித்துப் பார்த்தார். மீர் ஆலம் எங்கே?’ என்று கேட்டார். “மீர் ஆலமும் அவன் கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர்” என்று அருகிலிருந்த நண்பர்கள் கூறினர்கள்.